Header Ads



இது என்ன யாழ் முஸ்லிம்...? இந்தியருக்கு வந்த சந்தேகம்..!


(M.H.A.Samad B.Com, M.B.A, FBIM (UK)

ஓய்வுபெற்ற அமைச்சு ஆலோசகர்)

நான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. மாதக்கணக்கில் அங்கு தங்க வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது தாயகச் செய்திகளை இன்டர்நெற் மூலம்தான் இரவு நேரங்களில் பார்க்க ஓய்விருக்கும். சென்ற ஆண்டு டுபாயில் நான் தங்கியிருந்த போது 'யாழ் முஸ்லிம்' இணையத்தளத்தில் ஊர் செய்திகளைப் பார்த்தேன். ஏனைய தேசியப் பத்திரிகைகளையும் வலைப்பூக்களையும் இணையத்தில் பார்த்தாலும், 'யாழ் முஸ்லிம்' காய்தல், உவத்தல் பக்கச்சார்பு, செருகல் எதுவுமில்லாமல் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தருவதால், எனக்கு அவற்றைப் படிப்பதில் ஒரு நம்பிக்கை எற்பட்டுவிட்டது. 

ஒரு நாள் எனது அறையில் 'யாழ் முஸ்லிம்' செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த போது, எனது நண்பர் ஒருவர் அறைக்குள் நுழைந்து அந்தச் செய்திகளை அவரும் வாசித்தார். அவர் ஒரு பொறியியலாளர். இந்தியர் - முஸ்லிம். சமயம், அரசியல், கலாசாரம் என்பனவற்றில் நன்கு தெளிந்த அறிவுடையவர். 

அவர் என்னிடம் 'சுன்னி முஸ்லிம்' ' ஷியா முஸ்லிம்' 'மலே முஸ்லிம்' 'போரா முஸ்லிம்' 'கறுப்பு முஸ்லிம்', 'வெள்ளை முஸ்லிம்' என்று கேள்விப்பட்டுள்ளேன். இது என்ன? யாழ் முஸ்லிம். இவர்களும் அலி (ரலி), உமர் (ரலி) என்ற இஸ்லாமிய பிரிவினைவாதிகளா? என்று அவரது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். 

நான் அவருக்கு விளங்கும் வகையில் பின்வருமாறு பதில் கூறினேன்...

'யாழ்ப்பாணம் இலங்கையின் வட மாகாணத் தலைநகர். அங்குள்ள முஸ்லிம்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு தமது சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த மக்கள் புத்தளம், கொழும்பு போன்ற நகரங்களில் குடியேறி அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்கள் இழந்தவற்றை அரசால் இதுவரை ஈடுசெய்ய முடியவில்லை. அவர்களின் சார்பாக குரல்கொடுக்கும் இணையத்தள இதழ்தான் இந்த 'யாழ் முஸ்லிம்' என்று அவருக்கு விளக்கினேன்.' 

முஸ்லிம் காங்கிரஸ் உருவாகும் போது, அரசாங்க ஊழியர் என்ற வகையில் திரைமறைவிலிருந்து செலயாற்றிய பலரில் நானும் ஒருவன் என்ற வகையில, மர்ஹும் அஷ்ரப் அடிக்கடி என்னிடம் கூறுவார். 'இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு கட்சியை ஏற்படுத்துவதற்கு முன்பு அந்த சமுதாயக் குரலை வெளிக்கொணர ஒரு ஊடக அமைப்பினை உருவாக்கியிருக்க வேண்டும். நமக்கென ஒரு tv, ஒரு தேசியப் பத்திரிகை. ஒரு வானொலி, இவை யாவும் இருக்க வேண்டுமென ஆதங்கப்படுவார். 

தேசியப் பத்திரிகைகளில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் கூலிகளே. முதலாளிகளை அவர்கள் மீற முடியாது. 

-------------------------------------- இருந்த போது, சில ஒளிபரப்புக் கருவிகள் அவரது அமைச்சின் ஊடாக தருவிக்கப்பட்ட போதும் பல தில்லுமுல்லுகள் இடம்பெற்று அவற்றை வேறொரு ஸ்தாபகத்திற்கு விற்றுவிட்டதாக செய்திகள் வந்தன. அந்த விடயத்தில் அஸ்ரப்  ............................. மிகவும் கோபமாக இருந்தார். அவரைக் கட்சியை விட்டு நீக்கும்படியும் கட்டளையிட்டார். இதுவொரு பழைய கதையானாலும் நம்மவர்கள் விடும் தவறினால்தான் நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது, நாமாகத் திருந்தாதவரை நமது சமுதாயம் திருந்தமாட்டாது. இறைவனும் அவ்வாறு செய்யமாட்டான் என்ற கருத்தை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். 

முன்னைநாள் அமைச்சர் அமீர் அலியும் முஸ்லிம்களுக்கு தனியான ஓர் ஊடக அமைப்பு வேண்டும் என்ற கருத்தை என்னிடம் கூறியுள்ளார். அமீர் அலியின் தம்பி அஷ்ரப் சிஹாப்தீன் சில முயற்சிகளை அக்காலத்தில் எடுத்தார். ஒரு வானொலி நிலையத்தை மட்டக்களப்பில் உருவாக்குதல் வேண்டும் என்ற முயற்சியில் அவர் இறங்கினார். அதற்கான Concept Paper   ஐ நான் எழுதிக்கொடுத்த ஞாபகம் எனக்கு வருகிறது, அந்த முயற்சியும் சரிவரவில்லை. இப்பொழுது அவர் பேஸ்புக்கில் அடிக்கடி சொல்லி வருகிறார். பொருளாதார ரீதியில் ஒரு தனி மனிதனால் இந்த பெரும் முயற்சியை சாதிக்க முடியுமா என எனக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஆனால், அவர் பலரிடம் உதவிக்கரம் நீட்டி வருகிறார். 

எனது உடனடியான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் 'யாழ் முஸ்லிம்' முஸ்லிம்' என்ற பிரதேச ரீதியான பெயரை மாற்றி தேசிய ரீதியான ஒரு முஸ்லிம் இணையத்தள இதழாக மாற்ற முடியுமா? அவ்வாறெனில் இலங்கையிலுள்ள எல்லா முஸ்லிம்களும் உங்களுக்கு உதவுவார்கள். சிந்தியுங்கள். இது எமது சமூகத்தின் நீண்டகாலத் தேவை. முஸ்லிம்களுக்கு சில பத்திரிகைகள் எல்லாம் இருக்கின்றனவே என நினைக்க வேண்டாம். ஏனெனில், அவை வேறு முதலாளிகளின் சொத்துக்கள். ஓர் அளவிற்கு மேல் அவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது. 


4 comments:

  1. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்

    ReplyDelete
  2. அதிகமான வாசகர்கள் நெடுங்காலமாக அறியாமல் இருந்த யாழ் முஸ்லிம்களின் வடமாகாண முஸ்லிம்களின் நிலைகுறித்தும் நிலமை குறித்தும் அறியும் பேர் ஆவளிலேயே யாழ் முஸ்லிம் தளத்தை நாடுகின்றனர் எனவே யாழ்முஸ்லிம் வடமாகாண முஸ்லிம்களின் ஒவ்வொறு அசைவையும் பிரதி பளித்து செய்தி வெளியிடுவதில் இன்னும் இன்னும் முன்னேரவேண்டுமே ஒழிய தேசிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிராந்திய மக்கள் குறித்த சேதிகளை குறைத்துகொள்ள கூடாது தேசியரீதியான ஊடக இணையத்தை பிரிதொறு தளத்தில் கட்டி எழுப்புவதே மிக சிறந்தது யாழ்முஸ்லிம் தன் தனித்துவதுடன் என்றும் தொடர வேண்டும்

    ReplyDelete
  3. யாழ்ப்பாணம் என்ற ஊரையும் தெரியாத அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்ததும் தெரியாத துபாய் நண்பர் !!! கவுரவ சமத் அவர்கள் அவரின் நண்பருக்கு தெளிவு படுத்தியதுக்கு நன்றிகள் பல ...யாழ் முஸ்லிம் இணையம் எமது சொத்து...யாழ் எனும் பெயரை கொண்டதினால்தான் இக் கவுரவம் அதற்கு!!!

    ReplyDelete
  4. Well said Brother, change the name will be make a unity among all muslims in Srilanka

    ReplyDelete

Powered by Blogger.