மூதூரில் அடை மழை - மக்கள் இடம்பெயர்வு (படங்கள் இணைப்பு)
(அஸ்ஸிஹாபி)
மூதூர் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்நிலக்குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி வருவதனால் அப்பகுதி மக்கள் உயர்ந்த இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதேவேளை, கடல் கொந்தளிப்பினால் தக்வா நகர், ஹபீப் நகர் முதலான கரையோரக் கிராமங்கள் சிலவற்றில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
தொடர மழையினால் சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளன.
கடற்றொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், முதலானோர் இச்சீரற்ற கால நிலையினால் தொழிலின்றி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment