கிணற்று நீருக்கு வரி அறவிடுவதை அனுமதிக்கமாட்டேன் - நீர்வளத்துறை அமைச்சர் சூளுரை
கிணறுகளுக்கு வரி அறிவிடும் திட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென நீர்வனத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சூளுரைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நீர்வளத்துறை அமைச்சராக நான் பதவியிலுள்ளேன். எனினும் கிணற்று நீருக்கு வரி அறவிடப்படுமென்ற தகவல் எனக்கு அறிவிக்கப்படாமலேயே வெளியாகியுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒருபோதும் நான் அனுமதி வழங்கமாட்டேன். இவ்வாறான திட்டத்தால் சாதாரண பொது மக்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்படைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பராம்பரியமாக காணப்படும் குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீருக்கும் வரி அறவிடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக, நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்திருந்தது. இதற்காக நீர்வடிகாலமைப்பு சட்டத்தில் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
Post a Comment