லெபனான் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி, 80 பேர் காயம் (படங்கள்)
ஆசிய கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடு லெபனான். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ளது. சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக லெபனானிலும் பதட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியான அஷ்ராபியா சஸ்சின் சதுக்கத்தில் இன்று காரில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தபோது குண்டுவெடித்ததால் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள கட்டடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. காயமடைந்த அனைவரும் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் சிகிச்சைக்கு ஏராளமான ரத்தம் தேவைப்பட்டதால், பொதுமக்கள் ரத்ததானம் செய்ய முன்வரவேண்டும் என்று மருத்துவமனைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
Post a Comment