ஈரான் மீதான பொருளாதார தடையால் 6 மில்லியன் நோயாளர்கள் பாதிப்பு
(Tn)
மேற்கு நாடுகளின் பொருளாதார தடையால் ஈரானில் 6 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு முன்னணி மருத்துவ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக ஈரானின் பிரெஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, தலசீமியா, லியுகேமியா போன்ற நோய்களால் அவதிப்படுவோருக்கு மருந்து இன்றி காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
‘இரு மாதங்களுக்கு முன் இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளானேன். எனக்கு நான்கு முக்கிய மருந்துகள் தேவைப்படுகின்றன. தற்போது நான் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளேன்’ என்று நோயாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எண்ணெய் மற்றும் வங்கிகளை இலக்குவைத்தே மேற்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இதனால் ஈரானிடம் அந்நிய செலாவணி குறைவாகவே இருக்கும். எனவே இறக்குமதிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெஹ்ரான் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரொவத் இஸதி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிசமமாக 400 மில்லியன் டொலர் பெறுமதியானதாக இருந்தது. தற்போதைய சூழலில் ஈரான் உள்நாட்டு தேவைக்கான மருந்து உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிரு ப்பதாக ரொவத் இஸதி மேலும் தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியே அந்நாடு மீது மேற்கு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
Post a Comment