Header Ads



சவூதி அரேபியாவில் துன்புறுத்தலுக்குள்ளான 400 இலங்கை பெண்கள் அகதி முகாமில் தஞ்சம்


(சூரியன்)

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களின் பின்னர் தொழில்தருணரிடம் இருந்து தப்பி வந்த 400க்கம் அதிகமான இலங்கை பெண்கள் சவுதியின் உலேய்லா நகரில் உள்ள முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர். தங்களை நாடு திரும்ப உதவி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  
அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்ட நடைமுறைகளில் சவுதியில் இல்லை என்று இதன் போது தூதகரத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களின் ஊடாகவே நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எமது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையுடன் தொடர்பு கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் இன்னும் தாம் அறிந்திருக்கவில்லை என்று அதன் தலைவர் அமல்சேனாதிலங்கார  தெரிவித்தார். இந்த பெண்கள் குறித்து அறியக்கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.