அநுராதபுர பள்ளிவாசல் எரிப்பு - 3 நாள் கழிந்து உலமா சபை கண்டனம் தெரிவிக்கிறது
ஹஜ்ஜுப் பொருநாள் தினத்தன்று அதிகாலை அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசல் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை ஜம் இய்யத்துல் உலமா சபையினர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இது குறித்து உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பள்ளிவாசல்களுக்கெதிரான தக்குதல்கள் இடம்பெறமாட்டாதென பொறுப்புவாய்ந்தவர்களால் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் சம்பவங்கள் மேலும் இடம்பெற்றுவருகின்றன.
மக்கள் தத்தமது சமயங்களை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டுக்குத்தேவையான நாட்டுப்பற்றுள்ள சமுதாயம் உருவாகும். இதுவே நாட்டின் அபிவிருத்திக்கு வழிகேலுவதாக அமையும்.
இதுவரை சுமார் ஆறு பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தேற்றுவிக்க ஏதுவாக அமையும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுப்பதற்கு நாட்டின் தலைவர்களுடன் பேசி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென உலமா சபை கேரிக்கை விடுப்பதுடன் அநுரதபுர பள்ளிவாசல் எரிப்புச் சம்பவத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸஸலாமு அலைக்கும்
ReplyDeleteபோயா தினத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே எம்மீது கடமையான உல்ஹியா போயா தினத்தன்ரு கொடுக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்ட ஜம்இயதுல் உலமா. முஸ்லிம்களாகிய எம்மீது இளைக்கப்பட்ட ஒரு ஹத்துமீரலுக்கு 3 நாள் கழித்து அவர்களது கண்டனத்தை தெரிவித்திருப்பது, அவர்கள் மீது முஸ்லிம்கள் கோபம் அடைவார்கள் அல்லது அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து விடும் என்ற பயத்திற்காகவா என்ற சந்தேகம் எழுகின்றது.
இது வரை ஆறு பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது என்று கூறும் ஜம்இயதுல் உலமா, ஏழாவது பள்ளிவாசல் தாக்கப்பட்டாலும் வெறுமனே கண்டன அறிக்கையை விட்டு விட்டு முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தலையில் பொருப்பை சாட்டிவிட்டு தங்களது கடமை முடிந்து விட்டது என்று ஒதுங்கிக்கொள்ளுமா?
அல்லது இம்முறையாவது ஏதாவது ஆக்கப்பூர்வமான, முஸ்லிம் சமூகம் ஜம்இய்யதுல் உலமா மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ெமறுகூட்டும் முடிவுகளை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குமா?
அல்லாஹ் எமக்கு போதுமானவன்
இம்தியாஸ்