இறைவனின் நாட்டம் இப்படியும் இருக்கும்..!
தங்களது திருமணம் நடந்த தினத்திலிருந்து சேமிக்கத் தொடங்கி 30 வருடங்கள் சொந்தமாக சேமித்து ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து மெக்காவிற்கு சென்றுள்ளனர் ஒரு தம்பதியினர்.
70 வயது சஹனாஸ் மற்றும் அவருடைய கணவர் இருவரும் சிறு சிறு தொகைகளாக சேர்த்து இன்று இருவரும் இந்த யாத்திரையை தற்போது நிறைவேற்றி வ்ருகின்றனர்.
ஒருமுறை அவர்களின் மகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது கூட இந்த தொகையை தொடாமல் வேறு வகையிலேயே பொருளாதார உதவி பெற்று நோயை குணமடைய செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்ல முடிவெடுத்தபோது, தங்களிடம் இருக்கும் சேமிப்பில் உள்ள தொகை போதாது என்பதால் தங்களுடைய சொந்த நிலத்தை விற்பனை செய்து அந்த தொகையில் இந்த புனிதக் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு," எங்களுக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது உடல் நிலையும் அடுத்த வருடங்கள் ஒத்துழைக்குமா என்று தெரியாது மேலும் உயிரோடு இருக்கும் இந்த தருணத்திலேயே இப்புனித இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இவ்வருடம் இந்த கடமையை நிறைவேற்ற வந்துள்ளோம். இப்பொழுது எங்கள் மகிழ்ச்சிக்கு ஈடில்லை" என தெரிவித்தனர். inneram
இவர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
ReplyDeleteஇப்படி கஷ்டப்பட்டெல்லாம் ஹஜ் செய்ய வேண்டுமென என்கும் குறிப்பிடப்படவில்லை.
சூரா மாஊன் சொல்கிறது ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டாதவன் மறுமைநாளை மறுப்பவன் என்று.
அப்படிப்பட்டவன் தொழுதால் அவன் நாசமடையட்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இவை பற்றி எங்களுக்கு இந்த கவனமுமில்லை. கஃபாவின் முன் போய் அழுதால் எல்லாம் சரி என்பது போல்