லிபியாவில் உள்நாட்டு மோதல் - 22 பேர் மரணம், 200 பேர் காயம்
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாபி சமீபத்தில் ஏற்பட்ட புரட்சி காரணமாக கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து அங்கு புதிய அரசு ஆட்சி செலுத்தி வருகிறது. இந்நிலையில், கடாபிக்கு ஆதரவு தெரிவித்து வந்த பானி வாலித் என்னும் பதியிலுள்ள கடாபி ஆதரவாளர்களுக்கும் அந்த பகுதியில் அரசுக்கு ஆதரவளித்துவருகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆயுதக்கலச்சாரம் தாண்டவமாடும் லிபியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் போராடி வருகிறது.
Post a Comment