Header Ads



13ம் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வெகுசன வாக்கெடுப்பு நடத்தினால் எதிர்ப்போம்


13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் வெகுசன வாக்கெடுப்பு நடத்தினால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
  
 அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் வெகுசன வாக்கெடுப்பு நடத்தக் கூடாது அவ்வாறு நடத்தினால் அது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை எதிர்க்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாடு முழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது அவ்வாறு நடத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. போங்கோ சார்!!

    திவி நெகும என்ற மு. கா வின் நாடகத்தை நன்றாக நடத்தினீர்கள்!
    13 என்ற அடுத்த நாடகத்துக்கு தயார் ஆகிறீர்கள் போலும் ........
    கடந்த தேர்தலில் பதவிகளுக்காக எங்கள் வாக்குகளை சூறையாடிய உங்களை நம்புவதட்கு நாங்கள் தயார் இல்லை .
    மு. கா வின் வீண் பேச்சுகளும் வீர வசனங்களும் இன்னியும் வேண்டாம்.
    மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் !!!!!!!!!!

    ReplyDelete
  2. Sir Unkada Vaai pechu mattumthaan summa ponka sir neengalum unkal vaakkuruthihalum.

    ReplyDelete
  3. Mr.Hasan Ali you people say one and do nother..!! no one going to believe you and your Leader..we can trust Mr.sambanthan more then u r word..

    ReplyDelete

Powered by Blogger.