13 ஆவது திருத்தம் வேண்டாம் - கோத்தா அடித்துக்கூறுகிறார்
13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்திய அரசியல் மூலோபாயம் இதைவிட மாற்று வழி எதையும் விட்டு வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வடக்கில் நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதற்கான உதவிகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“13வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, முடிவு செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போரிடும் திறனை அழித்து விட்டதற்காக அரசாங்கம் திருப்தியடைந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு தேவையற்றது. தமிழ்ப் பகுதிகளில் படைத்தளங்களை அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முட்டாள்தனமானது.
போர்க்காலத்திலோ அமைதிக் காலத்திலோ படையினரின் நிலை கொள்ளல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசுக்கு உத்தரவிட முடியாது.
13வது திருத்தத்தில் ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளால் தீவிரவாதத்தின் மூலம் அடைய முடியாததை இதன் மூலம் கூட்டமைப்பு அடைய முனைகிறது.
Post a Comment