Header Ads



புரூஸ்லியின் வீடு 130 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது


பிரபல குங் பூ வீரர், மறைந்த புரூஸ் லீ, ஹாங்காங்கில் வசித்த வீடு, 130 கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. கடந்த, 1970ம் ஆண்டுகளில் வெளிவந்த, "பிஸ்ட் ஆப் ப்யூரி, என்டர் தி டிராகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து, உலகப் புகழ் பெற்றவர் குங் பூ வீரர், புரூஸ் லீ. இவர், 32வது வயதில், மர்மமான முறையில் இறந்தார். ஹாங்காங்கில், கோவ்லூன் டோங் மாவட்டத்தில், இரண்டடுக்கு கொண்ட கட்டடத்தில், இவர் கடைசியாக வசித்தார். 460 ச.மீ., கொண்ட இந்த வீடு, தற்போது ஓட்டலாக செயல்பட்டு வருகிறது. "இந்த கட்டடத்தை மியூசியமாக அறிவிக்க வேண்டும்' என, புரூஸ் லீயின் ரசிகர்கள், பல காலமாக வற்புறுத்தி வந்தனர். ஆனால், இக்கட்டடத்தின் உரிமையாளர், யூ பாங் லின், 130 கோடி ரூபாய்க்கு, இந்த வீட்டை விற்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து யூ பாங் லின் கூறியதாவது: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, அரசுடன் பல முறை, இந்த கட்டடத்தை மியூசியமாக மாற்றுவது குறித்து பேசினேன். ஆனால், அரசு இதற்கு, ஒத்துழைப்பு தரவில்லை. இனிமேலும் என்னால், பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது ஓட்டல் நடத்தும் உரிமையாளரும், இரண்டு ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளார். எனவே, கட்டடத்தை விற்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.