ஈரான் - அமெரிக்க பகையால் இலங்கைக்கு 1.2. பில்லியன் டொலர் நஷ்டம்
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையினால், எரிபொருள் இறக்குமதியால் இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தடையினால்,வேறு நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதால், 1.2 பில்லியன் டொலர் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்காரணமாக இலங்கைக்வின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 5 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஈரானிடம் இருந்து போதியளவு எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது போனதால், இலங்கைன் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்றுடன் மூடப்படவுள்ளது. ஈரானில் இருந்து மசகு எண்ணெய் விநியோகம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று தொடக்கம் சுமார் இரண்டு வாரங்களுக்கு சபுகஸ்கந்த ஆலை மூடப்படும்.
நவம்பர் நடுப்பகுதியில் எரிபொருள் விநியோகக் கப்பல் இலங்கை வந்தடைந்த பின்னரே இந்த ஆலை மீளத் திறக்கப்படும். இலங்கை 70 வீதமான பெற்றோல் மற்றும் டீசல் தேவையையும், 75 வீதமான விமான எரிபொருள் தேவையையும், 45 வீதமான மண்ணெண்ணெய் தேவையையும் சபுகஸ்கந்த ஆலையே நிறைவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment