அசிட் வீசியவர்களுக்கு 10 வருடங்களின்பின் தண்டனை - கண்டி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
(கண்டியிலிருந்து ஜே.எம்.ஹபீஸ்)
மத்திய மாகாண கணக்காய்வாளர் லலித் அம்பேவெலவுக்கு அசிட் திராவகம் வீசி கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கும் சிறைத் தண்டனையுடன் நட்ட ஈடும் வழங்க வேண்டும் என கண்டி உயர் நீதிமன்ற நீதவான் ப்ரீதி பத்மன் சூரசேன இன்று 2012 10 24 தீர்ப்பு வழங்கினார்.
முன்னால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஆனந்த முனவீர, உற்பட பிரதான சந்தேக நபர்களுக்கு 20 வருடங்களுக்கான கடும் சிறைத் தண்டனையுடன் இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
வியாபாரிகளான, மொஹமட் ராஸீக் மொஹமட் ரியாஸ், ஹுசேன் செய்யது மஹம்மது சாபி, ஒமர் லெப்பே மரிக்கார் மொஹமட் நவ்பர், எம்.ஜே. மொஹமட் ரிபால், அஸ்ரத் ராமம், மற்றும் மொஹமட் ஹனிபா மொஹமட் இம்டியாஸ் ஆகியோர் மூன்று குற்றங்களுக்கு குற்றவாளிகளாகக் காணப்பட்டதால் ஒருவருக்கு தலா 60 வருடங்கள் வீதம் சிரைத்தண்டளை விதித்து அதனை 20 வருடத்தில் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
ஒரு குற்றத்திற்கு ஒருவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் அபராதுமம் இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
2002 ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கும் மே மாதம் 20 ம் திகதிக்கும் இடையில் கண்டி அஸ்கிரியாவில் வைத்து கணக்காய்வாளர் லலித் அம்பன்வெலவுக்கு அசிட் வீசப்பட்ட மொஹமட் ரபீக் என்பவர் பாதிக்கப்பட்டவருக்ருக்கு 50 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இம்மாதிரியானவர்களுக்கு இந்த தண்டனை சரியானது இந்நிகழ்வு நடந்த போது ”இவனுகளை தூக்கில் தொங்க விடனும் என்பது தான் பெரும்பாண்மையான முஸ்லிம் வர்த்தகர்களின் நிலைப்பாடாக இருந்தது”
ReplyDelete