ஆட்சியதிகாரத்தில் யாரை அமர்த்துவதென இறைவனே தீர்மானிக்கிறான் - M.S. உதுமாலெப்பை
ஹப்றத்
கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியதன் மூலம் தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் முயற்சியினால் எமது ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட வீதி அபிவிருத்தி, நீர்பாசனம், கிராமிய மின்சாரம் மற்றும் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் மூலம் கிழக்க மாகாணத்தின் சகல பிரதேசத்திலுமுள்ள சகல இனமக்களுக்கும் இன,மத,மொழி வேறுபாடுற்ற முறையில் சிறந்த அற்பணிப்புடனான சேவையினை வழங்கியதுடன் இறைவன் வழங்கிய அமானிதத்தை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதன் பிரதியுபகாரமாக 2012ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் என்னை வெற்றியடையச் செய்து எனக்கு மீண்டும் அதே அமைச்சை இறைவனின் உதவியினால் ஜனாதிபதி அவர்களினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் புதிதாக அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
இந்த நிலமையினை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு முதலில் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று எனது இரத்தத்தின் இரத்தங்களான அம்பாறை மாவட்டத்தின் அனைத்து உள்ளங்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் விNஷடமாக எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும், ஆளுணர் மொஹான் விஜேவிக்ரம அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
கடந்த ஒரு சில மாதங்களாக நாம் சார்ந்திருந்த அரசுடன் ஆட்சி அதிகாரங்களில் இருந்து கொண்டு எம்மையும் எமது தலைமைத்துவத்தையும் ஏன் எமக்கெல்லாம் நிம்மதியை பெற்றுத் தந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் வசைபாடி பட்டை தீட்டிவிட்டு அப்பாவி மக்களின் மனங்களில் விஷத்தை விதைத்துவிட்டு உள்ளொன்று புறமொன்று வைத்து தம்மை நம்பிய மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் சதிசெய்து விட்டு ஏன் இந்த சமுகத்துக்காக பணியாற்றிய நாங்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்று அடம்பிடித்து இறுதி நேரம் வரைக்கும் சூட்சிகளையுடம் முனாபிக்தனங்களையும் செய்து வந்த கபடக்காற அரசியல் தலைமைகளின் சூட்சிகளையும் பம்மாத்துக்களையும் மக்கள் தேர்தலின் பின் நன்றாக விளங்கிக் கொண்டிருப்பார்கள்.
சூட்சிக்காரர்களுக்கெல்லாம் பாரிய சூட்சிக்காரன் இறைவன் இருக்கின்றான் ஆட்சிஅதிகாரத்தில் யாரை அமர்த்த வேண்டும் யாரை அமர்த்தக் கூடாது என்பதை இறைவன் தீர்மானிப்பான் அதுவே எங்களுடைய உறுதியான கொள்கையாகும் சிறுபிள்ளைத்தனமான உறுதியான கொள்கையில்லாத முனாபிக்தனமான அரசியல் பயனத்தினுடாக சமுகத்தை ஒருபோதும் வழிநடாத்த முடியாது.
பேசுவதற்கே வார்தைகள் இல்லாமல் பேசியவர்கள் வசைமாரிகளும் வம்புகளும் பேசியவர்கள் இன்று எந்தக் கூட்டினுள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தெளிவை முழு சமுகமுமே இன்று நன்றாக விளங்கியுள்ளது. விழுந்து விட்டோம் மீசையில் மண்படவில்லை என்று கூறும் அளவுக்கு இவர்களின் அரசியல் சானக்கியம் தெளிவு பெற்றுள்ளது.
தூற்றுவோன் தூற்ற போற்றுவான் போற்ற தாம் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தம்மீது வழங்கப்பட்ட அமாணிதத்தினூடாக பணியாற்றுவதற்கான ஆணையை வழங்கிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகளை வழங்குவதுடன் எமது பணி கூண்,குறுடு செவிடு இல்லாத வகையில் நேரிய முறையில் மக்களுக்காக பணியாற்றும் என்பதில் அனுவளவேனும் தளர்ச்சியடைய தேவையில்லை கிழக்கு மாகாணத்தின் சகல கிராமங்களும் சகல இன மக்களுடைய தேவவைகளும் நிறைவேற்றப்படும் அதற்காக எமது பணி தொடரும் எனவும் அமைச்சர் உதுமாலெப்பை தொடாந்தும் கூறினார்.
Congratz for you Minister, thanks for the service you did up to now even i have voted for SLMC.
ReplyDeleteDear Brother, Uthumaleebe!
ReplyDeleteI know you personally you are great man with exceptional qualities, I am sure those qualities have help you to win the hearts of the people and the All mighty Allah sees the heart not the actions. As long as you live with these temperament and show the usual outstanding services and hospitalities. Inshallah Allah the victory is yours always.
May the All Mighty Allah bess you.
Ouff, from Akkaraipattu
Congratulation Minister...
ReplyDeleteயாராக இருந்தாலும் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். ஒருவன் அவனுடைய நாவினால் நரகம் செல்வான் என்று ரசூலுல்லாஹி அலைஹிவசல்லம் கூறியிருக்கிறார்கள். நூறு வீதம் பாவம் செய்யாத மனிதர்கள் உலகில் எவரும் இல்லை. அதற்கு மலக்குமார்களை அல்லாஹ் படைத்துள்ளான். அந்த வகையில் ஒவ்வொருவரிடத்திலும் குறைகள் உண்டு. எவருடைய குறைகளையும் படம்பிடித்து காட்ட வேண்டிய அவசியமில்லை. சிந்தித்து செயல்பட்டு எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்டு வாழ வழிதேடுங்கள். அதுவே உலக வெற்றிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும். வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய மந்திரி அவர்களுக்கு.
ReplyDeleteHon Minister,
ReplyDeleteWell said.Almighty have selected you again.You can work hard for all the communities especially our Tamil Brothers who really grieve after Hakeems Historical Trachery.
நோன்பு திறக்க வந்த மனிதனை விரட்டினிங்க....அதைத்தான் தாங்க முடியல்ல.........எதிர்வரும் காலங்களில் அடிதடி அரசியல் செய்யாமலிருக்கப் பாருங்க. நீங்க நல்லவர்களாக இருந்தாலும் உங்களுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயம் நடாத்தும் காடயர்களை அடக்கப்பாருங்கள். சகோ. உவைஸ் இப்போ உங்க பக்கம்...சகோ. தவம் மு.கா பக்கம். நாளைக்கு யார் யார் எந்தத் தோனியில்!!? யாருக்குத்தெரியும். கோபமாக நடந்தாலும்....கொடுரமாக நடந்துகொள்ளாதீர்கள்.
ReplyDeleteநன்றி.
அபு மர்வான்
அக்கரைப்பற்று.