Header Ads



அமீர் அலி பதவியேற்றார்

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக அமீ்ர் அலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று சனிக்கிழமை பதவிப் பிரமானம் செய்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரிஷாட் பதியூதீன், பிரதி அமைச்சர் ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் அமீர் அலி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அப்ப பாராளுமன்ற உறுப்பினராகிறார் என்ற செய்தி வதந்தியா....?

    ReplyDelete

Powered by Blogger.