Header Ads



உலகில் குள்ளமானவர்கள் சந்தித்துக்கொண்ட போது.. ((படங்கள் + வீடியோ)



உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்ற பெயரில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்த, 18 வயதான, ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும் குள்ளமான ஆணான நேபாளத்தைச் சேர்ந்த சந்திர டாங்கேவுடன், 2013ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்துக்காக போஸ் கொடுப்பதற்காக சந்தித்து பேசியுள்ளார்.
 
உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்ணும், மிகவும் குள்ளமான ஆணும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை என்பதால், இதுவே புது கின்னஸ் சாதனை என, லண்டனில் இருந்து வெளியாகும் "டெய்லி மெயில்' பத்திரிகை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ஆம்கே, கடந்த ஆண்டு டிசம்பரில் தனது, 18வது பிறந்த நாளைக் கொண்டாடும் போது, உலகிலேயே மிகவும் குள்ளமான பெண், என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அதேசமயம் நேபாளத்தைச் சேர்ந்த, 72 வயதான டாங்கேவின் உயரத்தை அளந்து கணக்கிட்ட கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள், அவரை உலகிலேயே மிகவும் குள்ளமான ஆண் என, கடந்த பிப்ரவரி மாதம், கின்னஸ் புத்தகத்தில் சேர்த்தனர்.
 
இவர்கள் இருவரும், 2013ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்துக்காக, "போஸ்' கொடுக்க ஒருவரை ஒருவர் சந்தித்து, புதிய சாதனையை படைத்துள்ளனர். இருவரும் நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் போது, இருவரும் அவரவர் நாட்டு பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தனர்.வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், ஆம்கேவும் பங்கேற்க உள்ளார். 21.5 அங்குல உயரம் கொண்ட டாங்கே, உலகின் மிகவும் குள்ளமான ஆணாகவும், 24.7 அங்குல உயரத்துடன் ஆம்கே, உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

No comments

Powered by Blogger.