Header Ads



ஈரானை தாக்குவதற்கு உதவமுடியாது - இஸ்ரேலுக்கு கூறிய அமெரிக்கா

 
தூது

அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானை தாக்க தயாராகிவரும் இஸ்ரேலுக்குஅமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதியான மார்டின் டெம்ப்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரானை தாக்கினால் அமெரிக்கா உதவும் என கருதவேண்டாம். தாக்குதல் திட்டத்துடன் செயல்பட்டால் பிரச்சனையை சிக்கலாக்க அமெரிக்கா விரும்பாது என்று மார்டின் டெம்ப்ஸ் கூறியுள்ளார்.

லண்டனில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ்போட்டிகளில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்த அமெரிக்கா அணியுடன் மார்டின் டெம்ப்ஸ் வருகை தந்தார். ஈரானுக்கு அணுஆயுதம் தயாரிக்கும் திட்டமிருந்தால் அதனை தாக்குதல் மூலம் தாமதப்படுத்த முடியுமே தவிர நிறுத்தவியலாது என்று டெம்ஸ்ப்ஸ் கூறினார்.

முதன் முறையாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஈரான் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து எதுவும் தெரியாது என்றும்,  இதுத் தொடர்பான தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை எனவும் உயர் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திட்டங்களின் பெயரால் இஸ்ரேல், ஈரானை தாக்க முயலாது என்று முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா கருத்து தெரிவித்திருந்தார்.

2 comments:

  1. ஈரான்,இஸ்லாத்தின் எதிரிகளின் கையாளகத்தான் இருந்து வந்துள்ளது,வரலாறு சொல்கிறது,இப்போதும் அது தான் நடக்கிறது. இது எனது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.