Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்காக ஜனாபதி ஆணைக்குழு நியமிக்கப்படுமா..?


முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்


வடமாகாண முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தில் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத வடபுல முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் வழங்கப்பட்ட ஒரு வெகுமதியே இந்த அகதி வாழ்வு போகின்ற கள நிலவரங்களைப் பார்க்கின்ற போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வெள்ளி விழாவையும் கொண்டாடி விடுவர் போலிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஒரு போதும் திரும்பி வரவே மாட்டார்கள் என்ற எண்ணத்தில் முஸ்லிம்களின் கலாசார சின்னங்களான பள்ளி வாயல்கள், மத்ரசாக்கள்,  பாடசாலைகள் யாவும் வரலாற்றை மீளப்பேசிவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டரீதியில் அழிக்கப்பட்டுள்ளன.

தமது உரிமைக்காக போராடுகின்றோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு சமூகம் தம்மைவிட சிறுபான்மையாக தம்முடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்குச் செய்த அநியாயத்தை வரலாறு ஒரு போதும் மறக்காது, மன்னிக்காது.

முஸ்லிம்களின் கோடிக்கணக்காண ரூபாய்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களை சூறையாடியோர் ஒரு போதும் நிம்மதியக வாழமாட்டார்கள் 'அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்'

வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் தான் கிழக்கு மாகாண சபையில் தமக்கு ஆதரவு நல்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசிடம் கெஞ்சிக் கேட்டும் ஆதரவு கிடைக்கவில்லை வடக்கு முஸ்லிம்களின் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவையும் செய்து விட்டு அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான பிரச்சாரங்களையும் ஊடகங்களில் பரப்பிவிட்டு எந்த முகத்துடன் முஸ்லிம்களின் ஆதரவை எதிர்பார்த்தீர்கள்?

தமிழ்த்தரப்பை முஸ்லிம்கள் நம்பவேண்டும் என்றால் உங்கள் சமூகத்தால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள். புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று முஸ்லிம் கிராமங்களை புனரமைப்புச் செய்து கொடுங்கள்.இந்திய அரசிடமிருந்து கிடைக்கும் 50000 வீடுகளில் உரியபங்கை வடபுல முஸ்லிம்களுக்கு வழங்குங்கள்.

முதலில் வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு முஸ்லிம்களின் ஆதரவைக் கோர வாருங்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களின்    விடயத்தை ஆழமாக விசாரிக்கவில்லை. மேலோட்டமாக சிறுவிசாரணை செய்துள்ளது. இதில் நாம் திருப்தி காணவில்லை.

ஆகவே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் புர்த்தியாகும் இச் சந்தர்ப்பத்திலாவது. 90ல் நடந்த வெளியேற்றம் பற்றி விசாரித்தறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை மேதகு ஜனாதிபதி அவர்கள் நியமிக்க வேண்டும். இதற்கு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அமைக்கப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு பின்வருவனவற்றை விசாரிக்க வேண்டும்.

Ø 1990 புலநாய்வுப் பிரிவுச் செயற்பாடுகள்.
Ø 1990 இராணுவம், பொலிஸ், பலம் பலவீனம்
Ø 1990 அரச உயர் அதிகாரிகள்
Ø 90ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள்.
Ø 1990 முஸ்லிம் அமைச்சர்கள்.
Ø 1990 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
Ø 1990ல் இங்கு செயற்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.
Ø 1990 உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள்.
Ø இம்மக்களின் வெளியேற்றத்துடன் வெளிநாட்டு சக்திகள் சம்பந்தப்பட்டுள்ளனவா?
Ø 2009 யுத்தம் பற்றி மனித உரிமைக்கோசம் போடும் சர்வதேச நிறுவனங்கள் ஆயுதம் ஏந்திப் போராடாத அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட பின்பு செய்யப்பட்ட சுத்திகரிப்பு பற்றி ஏன் குரல் கொடுக்கவில்லை. மௌனம் காத்தனர்.
Ø முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட பின்பு அவசரமாக கோயில்களுக்கு நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகள் வழங்கப்ட்டமை.
Ø அரச காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டமை. (இனவிகிதாசாரமின்மை முஸ்லிம்கள் வெளியேற்றபட்ட கையோடு)
Ø 1990 பிரதேச தமிழ் மக்கள்.
Ø 1990 பாதுகாப்பு அமைச்சு உறுப்பினர்கள்.
Ø 1990 மாவட்டச்செயலாளர்.
Ø 1990 பிரதேச செயலாளர்கள்.
Ø இந்து கிறிஸ்தவ மதத் தலைவர்கள். (ஆயர்மார்)
Ø முன்னால் விடுதலைப்புலிப் பொறுப்பாளர்கள்.
Ø ஊடக வியலாளர்கள்.

போன்றோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதற்காக செயற்பட்ட உள்நாட்டுஇவெளிநாட்டு சக்திகள் இனம் காணப்பட வேண்டும். இழப்பீட்டுக்கான உரிய நஷ்டஈடும்; வழங்கப்படுவதுடன் வடபுல முஸ்லிம்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட்ட பின்பே வடமாகாண சபைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும், இனிமேல் இலங்கைச் சரித்திரத்தில் இப்படி ஒரு இனச் சுத்திகரிப்பு நடைபெறாது என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.                            
       
                                                         

No comments

Powered by Blogger.