Header Ads



'விற்கப்படும் முஸ்லிம் சகோதரி' கட்டுரைக்கு பதில்...!

பூவனா
 
கடந்த 29.08.2012ம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்தில் அபுஅஹமத் என்கிற புனைப்பெயரில் ஒருவர் எழுதியிருந்த 'விற்கப்படும் முஸ்லிம் சகோதரி' எனும் ஓர் ஆக்கம் பிரசுரமாகியிருந்தது. அதில் அவர் ஓர் சகோதர முஸ்லிம் பெண்ணை இழிவு படுத்தும் விதத்தில் முஸ்லிம் காங்கிரஸின் போஸ்டர் அமைந்திருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார். அது சம்பந்தமாக ஒன்றிரண்டு சகோதரர்களும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இது சம்பந்தமான என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

1. கட்டுரையாளர் அவரது கட்டுரையில் புகைப்படத்தின் சரித்திரத்தை சொல்லி, அது புத்தளம் அகதி முகாம் ஒன்றில் ஒரு வெளிநாட்டு புகைப்பட நிபுணரால் எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கிறார். அதேவேளை மார்க்கப்பற்றின் காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் முகத்தை மூடிக்கொள்ளும் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை முஸ்லிம் காங்கிரஸ் தன் சுவரொட்டியில் பாவித்திருப்பதாக முன்னுக்கு பின்னாக புலம்புகிறார்.
 
* ஒரு வெளநாட்டு புகைப்படப்பிடிப்பாளரின் கெமராவுக்கு திறந்த முகத்துடன் ஒரு முஸ்லிம் பெண் முகத்தை காட்டியது தவறென்று அவர் சொல்லியிருக்க வேண்டுமல்லவா..?
 
* இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதில் குற்றம் காணும் இக்கட்டுரையாளர், உலகெங்கும் உள்ள எவரும் பார்க்ககூடியவாறு அப்புகைப்படத்தை வலைத்தளத்தில் இட்டவர்களை இட்டதை பொருட்படுத்தாமல் இருப்பது இவர் முஸ்லிம் காங்கிரஸின் மேல் காட்டும் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாகவே தெரிகிறது.

2. ஒரு சுவரொட்டி என்பது வெறுமனே செய்தியை சுமந்த சப்பைக் கட்டாக இல்லாமல் அந்த செய்தியின் பரிமாணத்தை கண்தொட்டு கல்புவரை இறக்குவதற்கு பொருத்தமான புகைப்படமொன்றை பாவித்து இருக்கிறார்கள். நினைக்கிற செய்தியை மிக ஆழமாகவும் மனதைத்தொடும் படியும் வெளிப்படுத்தியிருக்கிற இப்போஸ்டரில் அந்தப் பெண் எந்த விதத்தில் இழிவு படுத்தப்பட்டாள் என்பது எமக்கு விளங்கவில்லை. ஒரு நிர்வாண போட்டோவையோ, அல்லது படுக்கையறை காட்சியையோ காட்சிப்படுத்தியது போல் இவரும் குறிப்பு எழுதிய மற்றவர்களும் பதற்றப்படுவதற்கு அவசியமே இல்லை.
 
3. இன்றைய ஊடகத் துறையில் தினசரி பத்திரிகை தொட்டு அனைத்து சஞ்சிகைகளிலும் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள பரவலாக பிரசுரிக்கப்படுகின்றன. அவர்களுள் எவரையும் மானபங்க படுத்துவதற்காக அவ்வாறு பிரசுரிப்பதில்லை. செய்தியின் கனதியை அப்புகைப்படம் அதிகரிக்கும் என்பதனாலேயே அவை பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரையாளர் சொல்வது போல எடுத்துக் கொண்டால் எந்தப் பத்திரிகையிலும் எந்தப்படத்தையும் எவரும் பிரசுரிக்க முடியாது.

4. குறிப்பிட்ட புகைப்படம் பாதிக்கப்பட்ட கவலை மிகுந்த எதிர்பார்ப்புகள் சிதைந்த முஸ்லிம் பெண் ஒருவரை தத்மூபமாக சித்தரிக்கிறது என்பதே அப்புகைப்படத்தின் சிறப்பாகும். இது போன்ற கலையம்சம் பொருந்திய புகைப்படங்கள் பல கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படுவதுண்டு . இந்த புகைப்படம்கூட சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். அங்கெல்லாம் போய் கட்டுரையாளர் அழுது வடியப்போகின்றாரா?
 
முஸ்லிம்களின் எரியும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தியிருக்கும் இந்த புதிய அணுகுமுறையால் முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிகரிக்கிற மக்கள் அலையைக் கண்டு இவர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பது நன்றாகவே தெரிகிறது.
 
அக்கட்டுரையாளர் முஸ்லிம் காங்கிரஸின் எதிரணியை சேர்ந்தவர் என்பது அவருடைய கட்டுரையின் பல இடங்களிலும் தெளிவாக தெரிகிறது இவர்களைத்தான் ஆடு நனைவதை கண்டு அழும் ஓநாய்கள் என்று சொல்வார்கள்.
 
 

11 comments:

  1. அன்பின் புவனா,அந்த அபு அஹமத் என்பவர் ஓர் கிணற்றுத்தவளை,உலகம் தெரியாத ஜென்மம்.அவருடைய அறிவு அவ்வளவுதான்.அதனை கணக்கில் எடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. ஆடு நனைவதைக்கண்டு ஓநாய் அழுகிறதாமே! நாயைக்கண்டால் கல்லைக் காணோமே!

    ReplyDelete
  3. இங்கு கட்டுரையாளர் .. என்ன சொல்லவந்தார் என்பதை நீங்கள் இன்னும் புரியவில்லை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுக்கு பாடுபடாதான் வேண்டுமே ஓளியே.. அவர்களில் அவலங்களை திருடி அவர்களிடமே விற்று காசாக்கும் செயலைத்தான் வெறுக்கிறோம்... உங்களால் முடிந்தால் அஸ்ரப் பின் இப்படி இருந்து முஸ்லிம்களை இப்படி மாற்ற உதவியது என்று போஸ்டர் அடிக்க முடியுமா??? விடை பூச்சியமாகத்தான் இருக்கு ...ஊடகவியலார்களின் புகைப்படங்கள் சென்று அடையும் இடங்களில் நம் நிலையை உண்மைகள் உலக்கு சான்று பகிரும்... நீங்கள் அடிக்க போஸ்டர் உங்கள் தேர்தலில் மக்களில் உணர்ச்சிகளில் உங்கள் தலைவர்கள் குளிர் காய உதவும்....

    ReplyDelete
  4. உவ்வலவெல்லாம் கதைக்கிற பூவனா, தன்ர மனுஷியின்ர, மகளின்ர போட்டோவைப் போட்டு போஸ்டர் ஒட்டுவாரே??

    உங்கட தலையர் ரவூப் ஹக்கீமுக்கும் மனுஷி மக்களெல்லாம் இருக்குதானேயப்பு, (உதப் பத்தி பேப்பரிலை
    படிச்சிருக்கிறம்)
    உங்கட தலையார் விரும்புவரீ, உப்புடி அவற்ற மனுஷி பிள்ளையள்ட போட்டோவைப் போட்டு போஸ்டர் ஓட்டுறதுக்கு?

    தான் தனக்கு விரும்புறதை, தன்ர
    சகோதரனுக்கு விரும்பாதவரை, நீங்கள் முஸ்லிம் ஆக மாட்டீர்கள் எண்டு கதீஸ் இருக்கல்லே.

    ReplyDelete
  5. ஒரு தேர்தல் கால விளம்பரத்துக்காக ஏன் ஒரு பென்னின் படத்தை போட்டுத்தான் போஸ்ரர் அடிக்கவேண்டுமா? சற்று சிந்தியுங்கள் ,வெரும் விரண்டா வாதம் பேச தேவையில்லை

    ReplyDelete
  6. இங்கு கருத்திட்டவர்களில் சிலர் என்ன சொல்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் எழுதியிருக்கிறார்கள்.அத்துடன் முஸ்லிம் சமூகம் காலம் காலமாக ஜாஹில்களாகத்தான் இருப்போம் என்று கூறுவது போல் உள்ளது.ஹலோ அப்பாவி நீ.....?????

    ReplyDelete
  7. "அபு அஹமத்"எழுதியது சரியானாதுதான் ஏனென்றால் அல்குர்ஆன்,ஹதீசை யாப்பாக கொண்ட மு.கா எப்படி ஒரு ஏழை முஸ்லிம் பெண்ணின் முகத்தை தனது அரசியல் இலாபத்திற்காக பயன் படுத்த முடியும்? இதை சரியென்று எழுதும் "பூனா"க்கள் இருக்கும்வரை ஹக்கீம் சமூகத்தை விற்று பிழைத்துக்கொண்டே இருப்பார்.

    ReplyDelete
  8. எங்கட மு.கா அம்பாரை ஆதரவு சனம் இதவுட ரொம்ப சோகமாகூட போஸ்கொடுக்க தங்கட வீட்டாகள் எல்லாத்தையும் தருவினம் அதவச்சி இன்னும் மு,கா ஆதரவு திறட்டலாம்??? சீ...சீ.. பேன்டது நாறடிக்கிறது விளங்காம என்னதுகெல்லாம் கட்சி அபிமானதால வக்காலத்து வாங்க வாராங்க??? அவகளுக்கு வெங்காயங்கள் போன்ற முபாரக் தங்காக்களின் ஆதரவு வேறு???

    ReplyDelete
  9. போஸ்டர்ல வந்தா மட்டும் தூக்கி பிடிப்பீங்க , பிக்கு சவத்துக்கே கும்புடு போட்டு இணை கற்பிக்கும் அமைச்சர்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதன் நியாயம் என்ன ?

    ReplyDelete
  10. பூவனா என்ற பெயரில் எழுதியுள்ளவர் முஸ்லிம் காங்கிரசின் ஒரு தீவிர ஆதரவாளராக இருக்க வேண்டும்.

    தவறை தவறு என்று ஏற்றுக் கொள்ளாமல், அதனை நியாயப் படுத்த முனைவது சரியல்ல. இப்படியான கட்டுரைகளை எழுதுவது, முஸ்லிம் காங்கிரசே தவறை உணர்ந்து அதனை திருத்த நினைப்பதனைக் கூட தடுத்து விடுவதாக அமைந்து விடும்.

    ReplyDelete
  11. Fallin you are absolutely right vakkalthu election kku sinner thaan kolaikaththukku kondu pokum

    ReplyDelete

Powered by Blogger.