Header Ads



கிழக்கு மாகாணத்தில் பாரிய தேர்தல் மோசடிக்கு ஏற்பாடு - ஹக்கீம் எச்சரிக்கை

 
அப்துல்

தேர்தல்கள் நடைபெறவுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள கிராமங்கள் தோறும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளோடு நீல நிற ரீசேர்ட், தொப்பி அணிவித்து அவர்களை தேர்தல் பிரசார நடவடிக்கைககளில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்களை தேர்தல் மோசடிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும்படி நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் செயலாளர் ௭ம்.ரி.ஹசன் அலிக்கு அறிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வெளிமாவட்ட வாசிகள் பொதுவாக மாவட்டம் முழுவதும் நடமாடித் திரிகின்றனர். அவர்கள் அரச கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கின்றார். காத்தான்குடி, மட்டக்களப்பு, கல்முனை, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் இந்த அரச கையாட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர்களில் பலர் முரட்டு சுபாவம் கொண்ட காடையர்களாக காணப்படுவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கின்றார். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களுடன் இணைந்து வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமானவர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்கும் அதன் பின்னர் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தவிருப்பதாக ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்து தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்து வருவதாலேயே இது பற்றி உடனடியாக தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயலாளர் நாயகம் ௭ம்.ரீ.ஹசன் அலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளரர்.

2 comments:

  1. கோடாரிக்கம்புகள் தான் மரங்களுக்கான பிரச்சினை.,மக்களே கோடாரிக்கம்புகளை தீயிட்டு கொளுத்துங்கள் மக்கி மண்ணாகி மரங்களுக்கு உரமாகட்டும்.

    ReplyDelete
  2. பொதுவாக மு.கா வை தவிர வேறு எந்த முஸ்லிம் கட்சிக்கும் வெளியூர் ஆதரவு தளம் கிடையாது மரந்தான் ம..ளை தொடக்கம் மா..வரை ஆக்களை கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது இப்பவே மட்டகளப்பில் ஆயிரதுக்கு மேட்பட்ட தலை நகர வாசிகள் தலை நகரில் இருந்து இங்கு வந்து வாக்கு கேட்கும் போராளியால் தங்க வைக்கபட்டிருக்கின்றனர் வாடி வீடுகளில்???

    ReplyDelete

Powered by Blogger.