முதலாவது முஸ்லிம் முதலமைச்சருக்கு கவிஞர் ஜெயபாலன் வாழ்த்து
கிழக்கு மாகாண முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் நஜீப் ஏ மஜீத்திற்கு தமிழ் பேசும் மக்கள் சார்பிலான எனது நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரதும் முஸ்லிம்களதும் தாய் மண் என்கிற யதார்த்தம் இன்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி முழு வடகிழக்கு மாகாணத்திலுமே உயர் பதவிகள் சுழற்ச்சி முறையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ஆண்டனுபவிக்க வேண்டும் என கனவு காண்கின்றேன்.
இவ்வாறு பிரபர கவிஞரும், தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகருமான கவிஞர் ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நீங்கள் பாரம்பரியமாக தமிழருடன் நல்லுறவு பேணிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது. திருகோணமலையில் தமிழர் முஸ்லிம்கள் உறவுக்கு உங்கள் தந்தையார் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பொனெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
துரதிஸ்ட்டவசமான எங்கள் கடந்தகால வரலாற்றின் குப்பைமேடுகள் எங்கள் மேம்பாட்டுக்கான வழிகளை எல்லாம் மூடிச் சவாலாக ஓங்கிக் கிடக்கிறது. கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களையும் அணிதிரட்டுவதன் மூலம்தான் மேற்படி சவாலை எதிர்கொள்ள முடியும் என்கிறதை நீங்கள் உணர்ந்திருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது. மேற்படி வரலாற்றின் சவால்களை மக்கள் துணையுடன் நீங்கள் எதிர்கொள்ளவேண்டும். .
தாய்மண்ணில் வாழ ஏங்கியபடி அகதிமுகாம்களில் வாடும் சம்பூர் தமிழ் மக்களதும் படுவான்கரை முஸ்லிம் அகதிகளதும் வாழ்வை மீட்டுத்தந்து துன்பப்படும் மக்களின் நம்பிக்கை நட்சதிரமாக நீங்கள் செயல்படவேண்டும். என்பது இந்தக் கவிஞனின் ஆசை.
காலம் காலமாக கிழக்கு மண் தமிழ் மற்றும் முஸ்லிம் வன்னியனார்கள் என்ற குறுநிலத் தலைவர்களால்தான் ஆழப்பட்டு வந்தது. கண்டி அரசின்கீழ் இருந்த காலத்திலும் இதுதான் நமது வரலாறாக இருந்தது. எனவே ஒரு தமிழ் முதலமைச்சருக்குப் பிறகு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் பதவி ஏற்பது காலத்தின் நீதியும் நியதியுமாகும். இதனை ஏற்று கிழக்கு மாகானத் தமிழ் மக்கள் நமது முதலைமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களை வரவேற்க்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் சம்பந்தபட்ட அரசியல் கட்ச்சிபற்றிய விமர்சனங்களுக்கு வெளியில் உங்கள் நல்லியல்புகளையும் உங்களூடாக சகோதர முஸ்லிம் மக்களுக்குக் கிட்டியிருக்கும் வரபிரசாதத்தையும் கெளரவிக்கும் தமிழர்களுள் ஒருவனாக உங்களுக்கு பல்லாண்டு கூறுகிறேன். கட்சி அரசியலுக்கும் போராட்டங்களுக்கும் வெளியில் நஜீப் ஏ மஜீத் நீதியுடன் செயல்படுகிறதற்கான கால அவகாசத்தையும் ஆதரவையும் தமிழர் கூட்டமைப்பு நல்கவேண்டும். இதுவே.முஸ்லிம் மக்களின் நல்மதிப்பை பெற்றிருக்கும் தமிழ் மக்களின் தலைவரான சம்பந்தர் அவர்களுக்கும் தமிழர் கூட்டமைப்புக்கும் என்னுடைய பணிவன்பான வேண்டுகோள்.
நமது பாரம்பரிய தாயகமான வடகிழக்கு மண்ணை சூரியனும் சந்திரனும் உள்ள வரைக்கும் காலமெல்லாம் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் நீதியுடனும் ஆண்டனுபவிக்கவேண்டும் என்கிற என்னுடைய கனவை வடகிழக்கு மக்கள் மனசில் விதைக்கிறேன்.
Eppothum vada kilakku Muslimkalukaka kural. Eluppum kavijar jeyapaalan avarkalukku vaaltthukkal
ReplyDeleteVADE KILAKKU,Mulimkal parempariyattaium samuhe varelarraum marekkatu sahevalvoadu koodiye,kavinyarin INAKKEPADDU ARESIYALAI Taney eppotum virumpi vantom IDAIL vantevarkal taaimannai TANI mannahe aale Ninattu aarumariya naeram koodivalntevarkalai konchemum Irekkeminri Turettiyatal vante VINAI INNAMTAN viddepadillai ,Iniyenum Inenkipohamel viddom enin namekeatu nalvalvu.
ReplyDelete