கல்முனை மாநகர மேயரின் விளக்கம்
சௌஜீர் ஏ முகைடீன்
“ஹரீஸ் பிரதி அமைச்சர் கனவுக்காக ஜமீலின் அமைச்சுப்பதவி அடகு வைக்கப்பட்டதா?” என்னும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் ஊடக இணையத்தளத்தில் 24/09/2012ம் திகதி வெளியான கட்டுரை தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் மக்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை ஆதரித்து அளித்த வாக்குப் பலத்தினூடாக 07 ஆசனங்களை பெற்று கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது. இச்சந்தர்ப்பத்தில் எமது கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வெய்துகிறேன். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சக்தியாக அதனைப் பயன்படுத்தியது.
அந்தவகையில் அரசோடு இணைந்து ஆட்சியமைத்து மக்களுக்கான சேவையினையும் உரிமைகளையும் பெற்றெடுப்பதற்கு இஸ்லாமிய வழிகாட்டலான மசூரா மூலம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க் கட்சி ஆசனங்களில் இருந்துகொண்டு கூக்குரலிடுவதனைவிட அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்குரித்தனவற்றை பெற்றெடுப்பதே சிறப்பானதாகும். அரசோடு இருக்கின்றோம் என்பதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக முடிக்கிவிடப்படுகின்ற செயற்பாடுகளை வாய் மூடி மௌனிகளாக இருந்துவிட முடியாது அந்த அடிப்படையில்தான் பள்ளிவாசல்கள் உடைப்பிற்கு எதிராக குரல்கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இவற்றையெல்லாம் சுய அரசியல் இலாபங்களுக்காக அரசியல் எதிரிகளினால் வேற்றுக் கண் கொண்டு பார்க்கப்படுகிறது.
“கல்முனையில் உள்ள ஹரீசுக்கு பிரதி அமைச்சர் பதவியை கோருவது என்றால் ஜெமீல் அமைச்சராகக்கூடாது என்ற அடிப்படையில் தான் தடுக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜமீலின் அரசியல் விரோதியான மேயர் சிராசையும் மஜீத் போன்றோரையும் துணைக்கு அழைத்துள்ளார்.” என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மைத் தன்மையினை புரிந்து கொள்ளாமையினாலேயே கட்டுரையாளர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கும் எனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. சென்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்கியபோது எனக்கெதிராக பிரச்சாரங்களில் ஜெமீல் ஈடுபட்டார். அது மாத்திரமல்லாமல் அத்தேர்தலில் நான் அமோக வாக்குகளைப் பெற்று முதல்வர் ஆசனத்திற்கு தகுதியானவனாக காணப்பட்டபோதும் எனக்கு அப்பதவி வழங்கப்படக் கூடாது என்பதற்காக பல பகிரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டார். ஆனால் இறைவனின் நாட்டப்படி நான் முதல்வராக நியமிக்கப்பட்டேன்.
இவ்வாறு இருந்தபோதும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் சகலவற்றையும் இறைவனுக்காக மறந்து பிரதேச மக்கள் நலனுக்காகவும் கட்சியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் ஜெமீலுக்கு வாக்களிக்குமாறு பிராச்சாரங்களை மேற்கொண்டிருந்தது எல்லோரும் அறிந்த விடயமாகும். யார் எப்பதவியை வகிப்பதனாலும் எனக்கு எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை நான் எப்போதும் மக்கள் நலனுக்காக என் உயிரையும் துச்சமாக நினைத்து செயற்படுபவன். இறைவன் நாட்டப்படியே அணுவும் அசையும் என்பதில் நம்பிக்கையுடையவன். நான் நாகரீகமான அரசியல் செயற்பாட்டினையே எப்போதும் விரும்புபவன் என அவர் தெரிவித்தார்.
Dear Mr.Siraj, We appreciate Jameel because he is very openly expressed(not from back) his view to support Mr.Nizam Kariapper without any boundary( Kalmunai or Sainthamaruthu) to bring a talented person. who support you to get a seat to contest? but what you did was you openly act as a supporter for Jameel and made a plot from the back as a munafiq( Allah forgive me if i am wrong), now you can say who is decent politician?
ReplyDeleteDon't make foolish comments, people know everything. what you said among your people to defeat Jameel and publicly you act as a supporter.
It’s so easy to sing it’s so easy to dance and get credit for it, but it’s so hard to achieve Minisitry post or anything else that really matters for the society to work with us having smiling faces. When in fact what is wrong is not the people, but the power the world is ruled of.
ReplyDeleteYes yes, I can feel some truth behind Jes's comment!
ReplyDeleteThis is the reason no body from Kalmunai or Sainthamaruthu got preferential votes to become a EPC member but Hakeem negotiated with Sammanthurai Maheer and switched his place to Jameel as Maheer got preferential votes just 300 below Mansoor.
As greed with Hakeem Maheer may get a Director/ Chairman post in any Gvt. Institution soon.
Above all these, Akkaraipattu voters very diplomatically cast their votes as per Athaullah's request and made 3 members for NC. This is the culture and leadership indeed.
As a son of Kalmunai I am really disappointed with our local kings's stupidities and finally all SLMC strategies became tragedies.
If we are to believe what you say is correct ie you always advocate decent politics, how come you try to justify the decision of SLMC after attacking the government mercilessly in the pre election platforms?.You seems to start to think muslims of this country are idiots. I do.
ReplyDeleteMR.siraj எல்லாவற்றிக்கும் முன்பாக ஓன்று கேக்கிறேன் கடந்த பாரிய சுனாமி, பாரிய வெள்ளம் இந்த அனர்த்த நேரத்தில் நீங்கள் எங்கு இருந்திர்கள் ஐயா ..அப்போது உங்களிடம் பணம் இல்லையா.ஊருக்கு வருவதற்கு வழி தெரியவில்லையா..இல்லை அரசியலுக்கு வரும் எண்ணம் அப்போது இல்லையாக்கும்.
ReplyDeleteMR.siraj உங்கள் நாடகத்தை நிப்பாட்டுங்கள்..உங்களுக்கு அரசியல் தெரியாது..உங்களை விட எங்களுக்கு அரசியல் நன்றாக தெரியும் மர்ஹூம் அஷ்ரப் நன்றாக படித்து தந்து இருக்கிறார்..நீங்கள் ஜமீல் மூலம் அரசியல் வாய்ப்பை பெற்று ஒரு சாதாரண மாநகர அங்கத்தவராக போட்டஈடுவதர்க்கு...பின்னர் அவர் அனுமதி இல்லாமல் அவரை பின்னோக்கி தள்ளிவிட்டு அவரின் அரசியல் வாழ்கையை பறித்து எடுக்கும் நோக்கில் செயற்பட்டிர்கள்...இதுதான் உணமையான துரோகத்தனம்..ஜமீல் முன்னதாகவே கட்சிடம் வாக்குறுதி அளித்துவிட்டார் நிசாம் காரியப்பருக்கு வாக்குகள் தேடிகொடுப்பதாக,அவர்மட்டும்தான் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்...சிராஜ் ஒரு சாதாரண ஒரு நபராகத்தான் தேர்தலில் போட்டிபோட்டார்...சிராஜ் நாங்களும் சாய்ந்தமருது தான் ...நீங்கள் மாகாண சபை தேர்தல் நேரத்தில் என்ன என்ன செய்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும்..மேடையில் ஜமீளுக்கு வாக்கு போடா சொல்லிவிட்டு உங்கள் மாமா மஜீத் க்கு மட்டும் வாக்கு போடா சொல்லவில்லையா....தேர்தல் ஆண்டு இரவு சாப்பாடு போட்டு யாருக்கு வாக்கு போடா சொன்னிர்கள்...1600 மேற்பட்ட வாக்குகள் ஜமீளுக்கு போடாமல் சாய்ந்தமருதுவில் உங்கள் மாமா மஜீத்துக்கு போடசொன்னது யாரு....ஜமீல் உங்கள் முகத்திற்கு முன்னால் எதிர்த்தார். ஆனால் சிராஜ் ஜமீளுக்கு பின்னால் குத்தினிர்கள்...உங்களுக்காக ஜமீலின் காரியாலத்தை உடைத்தவர்களும் நாங்கள்தான்,அந்த பயத்தினால் நீங்கள் உங்கள் சதியினால் ஜமீல் தோற்றுபோய் விடுவர் என்று இரவோடு இரவாக உங்கள் வீட்டுக்கு அதிரடிபடை பாதுகாப்பு போட்டுவிட்டு கொழும்புக்கு போனிர்கள் ...இறைவன் சதிகரனுக்கல்லாம் சதிகாரன் ..தனது தனி செல்வாக்கினால் 22000 க்கு மேற்ப்பட்ட வாக்குளை அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் பரவலாக பெற்றுள்ளார். சொல்லப்போனால் இவரின் விருப்பு வாக்குதான் SLMC இன் முதலாவது விருப்பு வாக்கு என்று சொல்லமுடியும்.ஜமீலுக்கு எந்த பதவி கிடைக்கவிட்டாலும் சாதித்துவிட்டார் முதலமைச்சர் பதவிக்கு பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு அலையை உண்டு பண்ணிவிட்டார்.
சிராஜ் அவர்களே ஜமீல் உங்களுக்கு துரோகம் இழைக்கவில்லை, மற்றதை நான் சொல்ல விரும்பவில்லை.
இனிமேலும் உங்கள் சில்லறைத்தனமான பேச்சுக்களை விடுங்கள்..உங்களை விட எங்களுக்கு அரசியல் நாடகம் நன்றாக தெரியும்..
Mr. Siraz, do you think the Sainthamaruthu public are fools to believe your pep talks? If you are saying you wanted Jameel to win, why didnt you send a congratulatory message the moment you knew he had won the election? Why didnt people see you at the Oorvalam? You are a politician without backbone who cant say things to face but always try to hide and do dirty things..Allah is watching you..In politics, those who are straightforward never win, probably you know the game..but people will teach you a lesson sooooon!
ReplyDeleteநீங்கள் கருத்து தெரிவித்தால் அது உன்மையாகிவிடுமா Hanees Hanee தலைமைக்கு வாக்கு கொடுத்து அதற்காக பிரதேசவாதம் இல்லாமல் ஜமீல் செயல்பட்டார் என்றால் ஏதற்காக அமோக வெற்றி பெற்ற சிராசுக்கு முதல்வர் பதவி வழங்கினால் நான் நஞ்சரிந்து மரணிப்பேன், எனது மையத்திற்கு மேலால்தான் சிராஸிற்கு முதல்வர் பதவி வழங்க முடியும். என நஞ்சுப் போத்தலை கையில் ஏந்தியவனாக ஜமீல் திரிந்த்தை மறந்து விட்டீர்கலா. ஹரீஸ் மாநகர சபைதேர்தலில் போட்டியிட்டபோது ஜமீலும் போட்டியிட்டு கக்கிய பிரதேசவாதத்தை மறந்து விட்டீர்கலா, நடந்து முடிந்த மாகான சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் ஏனைய வேட்பாளர்கள் சாய்ந்தமருது பொதுமேடையில் ஏறக் கூடாது என்ற பிரயர்தனம் பலிக்காமல்போனதை மறந்து விட்டீர்கலா, அதுமாத்திரமல்லாது முஸ்லிம் காங்கிரசின் சகவேட்பாளர்களது போஸ்டர்களைக் கூட ஒட்டாமல் தடுத்த்தை மறந்துவிட்டீர்கலா, முஸ்லிம் காங்கிரசின் ஏனைய வேட்பாளர்களின் ஆதரவாளர்களை அடித்து காயங்களுடன் அவர்கள் சாய்ந்தமருது வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டதையும் அதற்கான வழக்கு தற்போது இடம்பெற்றுக் கொண்டிரப்பதையும் மறந்து விட்டீர்கலா. ஜமீலின் பிரதேசவாதமற்ற அரசியல் எங்கேபோனது. கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆனால் உன்மையினை ஒருபோதும் மறைக்க முடியாது. குடிகார கும்பலினை வைத்துக்கொண்டு புரிகின்ற காடைத்தனம் இதற்கெல்லாம் தகுந்த பாடம் கிடைக்கும். அந்தவகையில் மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் மற்றும் முழக்கம் மஜீட் ஆகியோரின் வீட்டிற்கு கைக்குண்டு வீசி விட்டு பத்திரிகையில் எனது ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள் என பசப்புகிரார். அசாம் உள்ளிட்ட கும்பல் ஜமீலின் இல்லத்தில் இருந்து கொண்டு அவ்விருவரினது குடும்பத்தாருக்கும் தொலைபேசி வாயிலாக கொலை அச்சுறுத்தல் வழங்கியதை மறந்து விட்டீர்கலா. ஏன் பெண்ணாட்டம் கதை கூறுகுறீர்கள். 90 வீதமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரசுக்கு பெற்றுக்கொடுக்கும் சக்தி என்று ஜமீல் பத்திரிகையில் கூறுகிரார் ஆனால் நீங்கள் சாய்ந்தமருதில் ஜமீலின் வாக்கினை மேயர் குறைத்துவிட்டார் எங்குறீங்க என்ன வாப்ப நடந்த்து உங்களுக்கு. சுனாமி ஏற்பட்ட போது வெயிநாட்டிலிருந்து சிராஸ் செயற்பட்டார், அதுசரி அவ்வேளை இந்த ஜமீல் என்ன வாப்ப புளந்தார். அவர் செய்த்து அனர்தகாலத்தில் வெளிநாட்டில் இருந்து மக்களுக்கென்று சொல்லி விநாட்டவனிடம் இலவசமாக வாங்கிய நியுமோனியா காச்சலுக்கான மாத்திரையை சட்டவிரோதமாக கொண்டு வந்தபோது அது விமான நிலையத்தில் பிடிபட்டு ஒருவாராக கொண்டுவந்து விற்றதுதான் அவர் செய்தது. ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே போகலாம் பொத்துங்க வாய ம்ம்ம்.
ReplyDeleteசிறு பிள்ளைத்தனமாக கொமன்ட் பண்ண வேண்டாம் Azhar Razak. மேயர் வாழ்த்து செய்தி அனுப்பவில்லை என்பதனை அறியும் அளவுக்கு ஜெமீலுடன் நெருக்கமான ஒருவராகவே நீங்கள் இருக்கவேண்டும். உங்கள் கருத்துக்கள் எப்போதும் போதையோடு கூடியதாகவே இருக்கும். மேயர் நெருக்கத்தை நீங்கலாகவே தடுத்தீர்கள். வீண் சந்தேகங்களை உங்களின் குற்ற உனர்வு (“நான் எவ்வாறெல்லாம் சிராஸை எதிர்த்தேன், அப்படிப்பட்ட என்னை ஆதரிப்பதாக கூறுகிறான் அதை எப்படி நம்புவது”) என்று உங்களது உள் உணர்வுகளும் போதையோடு கூடிய முடிவுகளும் சிராசின் மாற்றத்தை ஏற்க மறுத்தது. முதல்வர் ஜெமிலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் அனுப்பவில்லை எனின் அதனை நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியும் அற்றவர்கள். அவ்ஊர்வலத்திற்கு சிராசை நீங்கள் அழைத்திருக்க வேண்டும் அழைக்கும் அளவுக்கு நீங்கள் இல்லை. அதைவிடுத்து கொக்கரிக்க வேண்டாம்.
ReplyDeleteஜெமீல் இன்றைய சுடர் ஒலி பத்திரிகையில் தெரிவித்துள்ளார் அவரது ஆதரவாளர்கள் அமைச்சுப் பதவி கிடைக்காத சோகத்தில் உள்ளதனால் அவரின் ஆதரவாளர்கள் கைக்குண்டு வீச்சினை மேட்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருப்பதானது. அவரின் ஆதரவாளர்களே கடைத்தனம் புரிந்துள்ளார்கள் என்பதனை தெளிவுபடுத்துகிறது. தனது ஆதரவாளர்களால் மேற்கொள்ளவில்லை என ஊர்ஜிதமாக தெரிவிக்கப்படவில்லை. அத்தேடு அமைச்சுப்பதவி கிடைக்காத சோகத்தில் அல்ல போதையில்தான் அவர்கள் இதனை மேற்கொண்டுள்ளார்கள்.
Hanees Hanee என்ன ரெம்பத்தான் அரசியல் பேசுறீங்க எப்படி மலேசியா நல்லமா. ஜெமில் மலேசியாவுக்கு அனுப்பியதற்கான நன்றிக்கடனா உங்கள் கருத்துக்கள். நல்லம் நடக்கட்டும் உங்கள் சுயநலம். யாருக்கப்பா அரசியல் தெரியாது. மேயரின் வாப்பா மீராசாஹிப் அவர்கள் அரசியலில் எவ்வாறு இருந்தார் என்பதை தம்பி உங்களுக்கு விளங்கப்படுத்த ஒரு கட்டுரையையே எழுத நேரிடும் அதனால தம்பி உங்கள் வாப்பா அல்லது பெரியவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கங்க சரியா. நல்ல அரசியல் குடும்ப பின்ன்னியைக் கொண்டவர்தான் சிராஸ் சரியா தம்பி விளங்கிச்சோ?.
ReplyDeleteநீர் எதை நியாயப்படுத்துகிறீர். சீட்டு வாங்கி கொடுத்துவிட்டு வோட்டு போடவேண்டாம் என்று பிரச்சாரம் செய்தது நியாயமானதா. ஒரு பெண்ணை ஆசைகாட்டி உச்ச பயனை தான் அடைந்தபிறகு அவளை நடுத்தெருவில் கைவிடுவதுபோல ஜெமீல் செய்தது நியாயமும் நேர்மையுமானதா. அது தூரோகம் இல்லையா. இப்ப மலேசியாவில தம்பி இருப்பதால தமிழ் மறந்திருக்கும் ஒரு தடவ அகராதிய புரட்டி பாருங்க துரோகம் என்றால் என்னவென்று விளங்கும்.