Header Ads



பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு....!



பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மகனும், வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானியும், தீவிரமாக காதலிப்பதாக, ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவரது மகன் பிலாவல், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். லண்டனில், சமீபத்தில் சட்டப் படிப்பு முடித்த, பிலாவலுக்கு 24 வயதாகிறது.பாகிஸ்தான் அமைச்சரவையில் வெளியுறவு இலாகாவை கவனிப்பவர் ஹினா ரப்பானி, 35. இவரும், பிலாவலும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக, "பிளிட்ஸ்' பத்திரிகையின் வங்கதேச பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது.ஹினா ரப்பானி, பிரோஸ் குல்சார் என்ற செல்வந்தரை மணந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இருப்பினும், பிலாவல் மீது கொண்ட காதலால், குல்சாரை பிரிந்து, பிலாவலுடன் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி விட, ஹினா ரப்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிலாவல், ரப்பானி காதல் விவகாரம், அதிபர் சர்தாரிக்கும் தெரிந்து, மகனை எச்சரித்துள்ளார். தங்கள் காதலை பிரிக்க முயற்சித்தால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவதாக தந்தையை மிரட்டினாராம் பிலாவல்.மனைவியை கட்டுப்படுத்தி வைக்கும் படி, ரப்பானியின் கணவர் குல்சாருக்கும், சர்தாரி மறைமுகமாக இடையூறு செய்துள்ளார். குல்சாரை, விவாகரத்து செய்ய தயாராக உள்ளதால், கணவரின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டாராம் ஹினா ரப்பானி.

No comments

Powered by Blogger.