சிரியாவுக்கு அமெரிக்காவின் உதவி
பொதுமக்களுக்கு எதிராக சிரியாவில் நிலவிவரும் நிலையிலிருந்து மீண்டு அம்மக்கள் மறுவாழ்வு பெற, சிரியாவுக்கு, அமெரிக்கா 45 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டுள்ளார்.
இதில் 30 மில்லியன் டாலர் மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணங்களுக்காக செலவிடப்படும் எனவும், 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு எதிராகப் போராடிவரும் பொதுமக்களின் வாழ்வை சீரமைக்க பயன்படுத்தப்படும் எனவும் ஹிலாரி கூறியுள்ளார். சிரிய போராட்டக்குழு ஆர்வலர்கள் 9 பேருடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சி(ரி)யாவுக்கு மண் அள்ளிப் போடுவதற்கு முன் வந்து விட்டார்கள்.தங்கள் நலனுக்கு பாதகமில்லாத ஒருவனை நியமிப்பார்கள்.
ReplyDelete