Header Ads



ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க சீனாவும் தயார்..!


ஆப்கானிஸ்தானை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தலீபானகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை குவிக்கப்பட்டுள்ளது.  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ வீரர், போலீசார் ஆகியோருக்கு பயிற்சி கொடுத்து வருகிறது. வரும் 2014-ம் ஆண்டில் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேற திட்டமிட்டுள்ளது. 

இதனால் தங்கள் ராணுவம், போலீஸ் துறைக்கு நிதி பெறும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரியும், கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஹோவ் யாங்காங் திடீரென்று ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாயை, அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். 

1966-ம் ஆண்டிற்கு பிறகு சீன உயர் அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும். பின்னர் பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை. துர்க்மெனிஸ்தான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த சீன அதிகாரி திடீரென்று ஆப்கானிஸ்தான் சென்று 2 முக்கிய ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 1 லட்சம் போலீசாருக்கு தற்போது நேட்டோ படையினர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். நேட்டோ படைகள் வாபஸ் ஆன பிறகு இந்த புதிய ஒப்பந்தம் மூலம் சீனா உதவி வழங்கும் என தெரிகிறது.  

No comments

Powered by Blogger.