Header Ads



பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்களே - ஐ.நா. மாநாட்டில் ஒபாமா



""பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா. சபையில் தெரிவித்துள்ளார். ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

 துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வற்புறுத்கிறோம். 

இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வீடியோ படம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் முஸ்லிம்களை மட்டுமல்ல, அமெரிக்காவையும் அவமானப்படுத்தியுள்ளது. எனவே, இந்த வீடியோ வெளியானதில், அமெரிக்காவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. மத சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டமும், எங்களிடம் உள்ளது. இதனால் தான், இந்த வீடியோவை எங்களால் தடை செய்ய முடியவில்லை. இந்த வீடியோவை கண்டித்து, அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது போன்ற செயல்களை நியாயப்படுத்த முடியாது. அமெரிக்கக் கொடிகளை கொளுத்துவதால், குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தி விட முடியாது. ஓட்டல்களை தாக்குவதால், வயிறு நிரம்பி விடாது. தூதரகங்களை அடித்து நொறுக்குவதால், வேலை வாய்ப்பு உருவாகி விடாது. எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான். இதனால், மக்களின் வாழ்க்கைத்தரம் வளர்ச்சியடையாமல் உள்ளது. "சகிப்பின்மை கூட ஒரு வகையில் பயங்கரவாதம் தான். இது ஜனநாயகத்துக்கு தடையானது' என, காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் நாடு பொறுப்பற்ற, வன்முறைக் கொள்கைகளை கடைபிடிக்கிறது. பழம்பெருமை வாய்ந்த ஈரான் நாட்டு மக்கள், அண்டை நாடுகளை போல அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். அணுசக்தியை, அமைதி பணிக்கு பயன்படுத்தும் நாடுகளை மதிக்கிறோம். ஈரான் நாடு அணு ஆயுதத்தை தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால், வளைகுடா பகுதியில் அணு ஆயுத போட்டி ஏற்படும். இந்தியா உள்ளிட்ட ஒவ்வொரு நாடும், கடின பாதையை கடந்து வந்துள்ளன. எனவே, அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை மதிக்கிறோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.





4 comments:

  1. சுற்றிவர அடிவாங்கிய பின்னர்தான் அமெரிக்காவுக்கு புத்தி கொஞ்சம் பிடிபட்டிருக்கு. பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதே அமெரிக்காதான் என்பதையும் ஒப்புக் கொள்ள காலம் அதிகம் எடுக்காது.
    பாகிஸ்தான் உதவியோடு தலிபானை உருவாக்கும் போது அது தெரியவில்லை
    ஷா ரிழா முஹம்மத் பஹ்லவி காலத்தில் ஈரானை செல்லப் பிள்ளையாக வைத்திருந்தபோது தெரியவில்லை
    ஈரானிய கோட்டை புரட்சியோடு சரிந்தபின்னர் சதாம் செல்லப்பிள்ளையாகி சலுகை பெற்றபோது தெரியவில்லை
    அறபாத், கடாபி, ஒஸாமா, மன்னர் ஹுஸைன், ஹாபிஸ்அல்அஸாத் (பஷர் அல் அஸாதின் தந்தை) இது போன்ற பலரோடும் கைகுலுக்கிக் கொண்ட போது விளங்காத உண்மை இப்போது அமெரிக்காவுக்கு விளங்கியிருக்கிறது
    முஸ்லிம் நாடுகளில் தீவிரவாதிகளை உருவாக்குவதும் தற்கொலைக் குண்டுதாரிகளாக அப்பாவி இளைஞர்களை மாற்றுவதும் பிரச்சினைகளை அதிகரித்த தளத்தில் பேணுவதும் CIA கும் இஸ்ரேலின் மொஸாட்டுக்கும் கைவந்த கலை.

    ஏன் இலங்கையில் கூட ஜம்பர் போட்ட முஸ்லிம் பெண்களைக் கொண்டு இஸலாத்தைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் திட்டம் தோற்றுப் போகும் போது இப்போதிருந்தே அமெரிக்க உளவுப் பிரிவினால் வளர்த்தெடுக்கப்படும் அப்பாவிப் பெண்களும் ஆண்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளாக மாறுவர் (அமெரிக்காவால் மாற்றப்படுவர்) பின்னர் அவர்களை அமெரிக்காவே தேடியழிக்கும். (அதற்கான முன்னேற்பாடுதான் அல்காயிதா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்க இலங்கையில் சட்டமியற்றும் திட்டத்தை வெளிவிகார அமைச்சரிடம் அமெரிக்க முன்வைத்திருப்பது ஆகும்)

    அப்போதுதான்

    NGO களும் கோட்சூட் போட்ட கௌரவமான மனிதர்களும் சில உலமாக்களும் சில இஸ்லாமிய தஃவா இயக்கங்களும் அமெரிக்காவின் விருது பெற்ற வீரப் பெண்களும் அமெரிக்காவின் எச்சிலைத் தின்ற கைக்கூலிகளா! என்று அனைவரும் வாய்பிளந்து நிற்பார்கள்.

    விழித்தெழுங்கள் சதிகளைப் புரிந்து கொண்டு முறியடிக்கத் தயாராகுங்கள்.

    அன்புடன்
    முஸ்டீன்

    ReplyDelete
  2. Ivaru maraimugama enna solla varraaru...
    America kodiya erikkaadhinga... ongalukku padippu varaadhu... avanga kodi,arivugalin uraividam...
    KFC poonra, americargalukku varuvaayai eettitharum kalanjiya saalaigalai udaikaadheergal... ungal meedhu porulaadhaara thadai vidhitthu pattiniyil pooduvoom...
    America embassy galai sedhappaduttaadheergal... ungalai, engalai po'nra me'rkattheya naadugalukku tholil reedhiyaagavum anumadhikka maattoom...
    Ungalukku payangaravaadhigal enru munkoottiye mutthirai padhitthu vittoom... idhupoonra vanmuraigalil meendum eedupattaal, ungal ilaya thalai murayinar muluvadhumaaga bayangaravaadhigal enru mutthirai padhittu ungal edhirkaalatthaye' mudakkividuvoom...

    *idhaitaan inge maraimugamaaga kooriyirukkinraar. islaatthayum, muslimgalayum kochai padutthi pe'sinaalum and aneedhi nadandhaalum naangal sagipputthanmayudan nadandhukolla ve'ndumaam... aanaal, ivargalukku e'dhum nadandhaal, vishvaroobam eduppaargalaam... pooda pulutthi...*

    ReplyDelete
  3. அட விபச்சாரதால் எல்லாம் முடியும் என்கிறாயா??? தந்தைபெயர் தெறியாத தேசது மக்களாக வாழ்வதைவிட இந்த உலகில் கேவலம் வேறு எதுவும் இல்லை வறுமையாலோ,பஞ்சதினாலோ ,அல்லது வேரெந்த காரணதினால் உங்களைபோல் கேவலமான வாழ்வை வாழமாட்டர் இந்த உலகில் முஸ்லிம்கள்???

    ReplyDelete
  4. ஆடு நனைகிறேதென ஓநாய் பாதுகாப்போடு ஊளையிடுகிறது,நீ யாரடா ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு
    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சி,அதிகாரங்களைக் கொடுக்கிறான்.வரம்பு மீறுபவர்களை அல்லாஹ்
    தான் தண்டிக்கிறான்.இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பது சரியென்றால் உலகின் சகல நாடுகளுக்கும்
    அந்த உரிமையிருக்கிறது.அமெரிக்காவுக்கு மானம் இருந்தால் தானே மானம் போவதுக்கு.மத சுதந்திரத்தை மதிப்பதனால் தான் ஓரினச் சேர்க்கை,மற்றும் அநாகரிகங்களையும்(உங்கள் பைபிளும்)அனுமதிக்கிறீர்கள்.தலிபான்கள் அடிக்கும் போது சகிப்பு காட்டியிருக்கலாமே.சகிப்பு தன்மையைப் பற்றி நீ எங்களுக்கு சொல்லித் தருகிறாயா?

    ReplyDelete

Powered by Blogger.