ஈரான் பெண்கள் கல்வி கற்பதற்கு புதிய கட்டுப்பாடுகள்..!
இரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம், கணினி விஞ்ஞானம், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும்.
இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற இரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார்.
மூன்று வருடங்கள் முன்பு அதிபர் தேர்தலின் பின்னர் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பெரும் பங்காற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியகிழக்கில் பெண்களை பல்கலைக்கழகங்கள் சென்று படிக்க அனுமதித்த முதல் சில நாடுகளில் இரானும் ஒன்று.
Post a Comment