சாத்வீகப் போராட்டத்திற்கு தயார் - சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக மாகாண சபைக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவ தற்காக சர்வதேசத்தின் ஆதரவும் பங் களிப்பும் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவை இப்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதில் சர்வதேச மும் உறுதியாக உள்ளது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்குமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு,
நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம். தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது. கடந்தமுறை போன்ற நிலைமை தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.
நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிக்கழிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம் என்றார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது
ReplyDeleteபேச்சு பல்லக்கு தம்பி கால் நடை??? மிக வீரியமான ஒரு போராட்டத்தை சொல்லிதரவா??? ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுகூட்டி தீர்வு திட்டதை முன்வைக்கிறீர்களா அல்லது நான்களே எங்களின் கைகளின் மணிகட்டை அறுத்து இரத்ததை சிந்தி ஒட்டு மொத்தமாக மரணிக்கட்டா என்று அரசை பார்து கேட்ட்டுபாறுங்கள் அரசு மசியாவிடில் போராட்டத்தை தொடங்குங்கள் கண்டிப்பாக உங்கள் உடல்களில் இருந்து உதுரம் முடியுமுன்னே உலகமே ஓடி வரும் உதவுவதட்கு???
ReplyDelete