கிழக்கு முதலமைச்சரின் செயலாளராக யூ.எல்.ஏ.அஸீஸ் நியமனம்
ஹப்றத்
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,மாகாண நிர்வாகம் ஆளணி உள்ளுராட்சி,புனர்வாழ்வு,மீள் குடியேற்றம்,கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்தை சேர்ந்த யூ.எல்.ஏ.அஸீஸ் மாகாண ஆளுணரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய,சமுக சேவை, விளையாட்டு,கூட்டுறவுத் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் அட்டாளைச் சேனை பிரதேச செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் இவர் இலங்கை நிர்வாக சேவையில் 23 வருடம் அனுபவமுடையவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
Post a Comment