Header Ads



ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீடசை - முஸ்லிம், தமிழ் மாணவர்களின் சாதனை


ஸாதிக் ஷிஹான்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக ளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை 1 மாணவனும், 2ம் இடத்தை மூன்று மாணவர்களும், 3ம் இடத்தை ஐந்து மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். புள்ளிகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் 10ம் இடத்தை இவர் பெற்றுக்கொண்டுள் ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற மட்டு. புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ் வண்ணன் துவாரகேஷ், வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற ரம்பைக்குளம் அரசினர் மகா வித்தியாலய மாணவி குகனேசன் தர்ஷிகா ஆகிய இருவரும் தமிழ் மொழி மூலம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

இவர்கள் பெற்ற புள்ளி 192 ஆகும். யாழ். மாவட்டத்தில் இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்ட யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கலைச் செல்வன் கீர்த்திகன், வட்டுக்கோட்டை யாழ். கல்லூரி மாணவன் லோகேஸ்வரன் ஸ்ரீஹீரன், அச்சுவேலி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி வைஷ்ணவி லோகநாதன் ஆகியோரும், வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்ற ரம்பைக்குளம் அரசினர் மகா வித்தியாலய மாணவி குகனேசன் சாம்பவி, திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட திருமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி காவியா பாலேந்திரன் ஆகிய மாணவ, மாணவிகள் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் பெற்ற புள்ளி 191 ஆகும்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கல்வி வலயத்தில் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் பாலச்சந்தர் சாய் பிரசாத் 192 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரியின் மாணவன் எஸ். கபிலாசன் 190 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எஸ். வென்ஸ்கர் மற்றும் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவன் வி. சுதர்ஸன் ஆகிய இருவரும் 185 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இது தவிர, ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலய மாணவன் அப்துல் முனாஸ் முஹம்மட் மதீன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 2ம் இடத்தையும், 189 புள்ளிகளைப் பெற்று திருமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி, அட்ஷ்கா அஜித் திருமலை மாவட்டத்தில் 2ம் இடத்தையும், திருமலை ஸ்ரீ கோனேஷ்வரா இந்து கல்லூரி மாணவன் முரளிதரன் செந்தூரன் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் ஷம்ஹான், காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய மாணவி எம். எஸ். அஹ்மத் ஷப்னி, எம். எல். எப். நிபாசாத் ஆகியோர் 188 புள்ளிகளைப் பெற்று மட்டு மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ண கல்லூரி மாணவன் கணக சபேசன் வைஷால் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 3ம் இடத்தையும் பேசாலை பாத்திமா ம.வி. மாணவன் அழகேசன் டயஸ் 186 புள்ளிகளைப் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டு ள்ளனர்.

183 புள்ளிகளைப் பெற்ற வவுனியா சிவபிரகாஷா மகளிர் கல்லூரி மாணவி நிக்ஷனா முத்துகுமார், வவுனியா மாவட்டத்தில் 3ம் இடத்தையும், முல்லைத்தீவு விஸ்வமடு ம.வி. ரஞ்சித் சுராபி, அலம்பில் செம்மாலை ம.வி. மாணவி மிருனுஷா ஜயராசா 183 புள்ளிகளைப் பெற்று முல்லை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

181 புள்ளிகளை பெற்ற புனித ஆண்கள் ம.ம.வி. மாணவன் துரை ரட்ணம் வினுஜன் மன்னார் மாவட்டத்தில் 2ம் இடத்தையும், 177 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி சந்திரகுமார் லக்ஷிகா, திருவையாறு ம.வி. மாணவன் பரமநாதன் சரலன், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தேவராசா சபில்ஷன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டுள்ளனர்.





No comments

Powered by Blogger.