Header Ads



சியம்பலாண்டுவ பகுதியில் நில அதிர்வு


சியம்பலாண்டுவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.27 அளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கிறது.

சியம்பலாண்டுவை, கொட்டாகொட, மற்றும் கோம்பிட்டிய ஆகிய  கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.ஜீ.விஜயானந்த தெரிவித்துள்ளார்.

இந்த நில அதிர்வு குறித்து பள்ளேகலையில் உள்ள நிலஅதிர்வு ஆராய்ச்சி நிலையத்தில் தகவல் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


No comments

Powered by Blogger.