Header Ads



புத்தசாசன அமைச்சுக்கு நன்றி தெரிவிப்பு


அப்துல் சமத்

இஸ்லாத்தையும் இறைதூதர் முஹம்மாது நபி அவர்களையும் அவமதிக்கும் திரைப்படத்தை இலங்கையில் ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் புத்தசாசன மற்றும் மத விவகார அலுவல்கள் பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை தொடர்பில் நன்றி தெரிவித்து அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

இலங்கை ஒரு ஜனநாக, சுதந்திர நாடு என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் அதன் படி வாழவும். உரிiயுண்டு. ஆனால் ஒரு மதத்தையோ அந்த மதத் தலைவர்களையோ அவதிக்கவோ இழிவுபடுத்தவோ சுதந்திரம் வழங்கப்படவில்லை. 

இஸ்லாத்தையும் இறைதூதர் முஹம்மாது நபி அவர்களையும் அவமதித்துள்ள அமெரிக்கத் திரைப்படத்தை இலங்கையில் ஒரிரு இலத்திரனியல் ஊடகங்கள் தங்களது ஊடக பிரபல்யத்துக்காக ஒளிபரப்ப இருந்த வேளையில் மேற்படி படத்தை ஒளிபரப்புவதை தடைசெயவ்தற்கான நடவடிக்கை பதில் புத்தசான அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். 

இந்நடவடிக்கையானது இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களைக் கௌரவப்படுத்தியுள்ளது. இஸ்லாத்தை மாத்திரமல்ல எந்தவொரு மதத்தையோ அம்மதங்களளைப் பின்பற்றுபவர்களையோ அவர்களின் கலாசார விடயங்களையோ அவமதிக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பாடாது இருப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் புத்தசாசன மற்றும் மத விவகார அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இத்திரைப்படத்தினால் புண்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் மன உணர்வுகளை மாத்திரமின்றி மதங்களையும் மனித உணர்வுகளையும் மதிக்கும் ஏனைய மக்களின், மதத் தலைவர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ள இணையத்தளங்கள் அப்படத்தை அவ்விணைத்தளங்களிலிருந்து நீக்கும் வரை குறித்த திரைப்படத்தை வெளியிட்டுள்ள இணையத்தளங்களை  இலங்கையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பது அவசியமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழிவிடம் கடந்த வாரம் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.