Header Ads



அமீர் அலியின் நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த மஹிந்த..!


தமிழில் - Inamullah Masihudeen

சிங்களத்தில் - கபில புன்சிமானகே

இது 29/09/2012 "மவ்பிம" சிங்கள பத்திரிகையின் செய்தியாகும். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போட்டவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கட்சியைச் சேர்ந்த அமீரலியாகும்.மாறாக முதலமைச்சர் பதவிக்கு நஜீப் அப்துல் மஜீத் தெரிவாகியதால் அமீரலி அமைதியானார்.

பின்னர் அமீரலி அவர்கட்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் ஒன்றை வழங்குவதற்கான ஏற்பாடும் இருந்தது.ஆனால் ஜனாதிபதி அவர்கள் அமீரலி அவர்கட்கு மாகாண சபை அமைச்சர் பதவியினை வழங்குவதற்கு முன்வந்தும் அமீரலி அவர்கட்கு பாராளுமன்றம் செல்வதற்கு விருப்பமிருந்ததால் மாகாண அமைச்சர் பதவியினை அவர் ஏற்கவிரும்பவில்லை.இறுதியில் அமீரலி அவர்கட்கு மாகாண அமைச்சர் பதவியுமில்லை, பாராளுமன்ற ஆசனமுமில்லை.

இவ்வாறு ஒரு பதவியேனுமில்லாமல் இருக்கும் அமீரலி  சென்ற வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தார்.

அப்போது ஜனாதிபதி, அமீரலியிடம் குறிப்பிட்டதாவது,,

 "நான் உன்னை மாகாண சபையின் அமைச்சராக நியமிக்க விருப்பம் தெரிவித்தேன் ஆனால் நீர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரமுடியாது அதற்கான வெற்றிடம் ஏற்பட வேண்டும்" தற்போதைய நிலமையில் மாகாண சபையிலேயே இருக்குமாறு அமீரலியை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். 

இதன் பின்னர் அமீரலி தீர்மானத்திற்கு வந்தார் மாகாண அமைச்சர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை சபைத்தலைவர் பதவியினையாவது பெற்றுக் கொள்வதற்கு. அதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய அமீரலி அவர்கள் முதலில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களோடும், பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களோடும் பேச்சு வார்த்தை நடாத்தி அரசாங்கத் தரப்பினர் சபையின் தலைவராக முன்வைக்கின்ற உறுப்பினரைத் தோற்கடிப்பதற்கு திரைமறைவில் செயலில் இறங்கினார். 

அமீரலியின் அனைத்து விடயங்களையும் எப்படியோ ஜனாதிபதிக்கு அறியக்கிடைத்தது, ஆத்திரமடைந்த ஜனாதிபதி அமைச்சர் ரிசாட் பதியுதீனை வரவழைத்து எச்சரிக்கை செய்தார்.

No comments

Powered by Blogger.