Header Ads



ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியின் சின்னமாக 'காஷ்மீர்'



ஐக்கிய நாடுகள் சபையின், தோல்வியின் சின்னமாக, காஷ்மீர் உள்ளது என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா., சபையின் ஆண்டு கூட்டம், தற்போது, நியூயார்க்கில் நடக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள், இக்கூட்டத்தில் உரையாற்றினர்.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, நேற்று பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது,

காஷ்மீருக்கான சுய நிர்ணய உரிமையை, பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது. பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில், இந்தியாவுடன் உறவு வைத்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய பிரதமரை, ஐந்து முறை சந்தித்துள்ளேன்.காஷ்மீர் பிரச்னை குறித்த, ஐ.நா., பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், இன்னும் நிலுவையில் தான் உள்ளன. ஐ.நா., சபையின் தோல்விக்கு, காஷ்மீர் ஒரு அடையாளமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.




No comments

Powered by Blogger.