Header Ads



ஒரே தீர்வு இஸ்லாம்தான் - பறஹகதெனியவில் கோவை எஸ்.ஐயூப் சிறப்புரை


பறஹகதெனியவிலிருந்து இக்பால் அலி

முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுதத்தி ஆத்திரமூட்டச் செய்து அவர்களை வன்முறையாளர்களாக சித்திரித்துக் காட்டுவதன்மூலம் இஸ்லாத்தில் மாற்றுமதச் சகோதரர்கள் அணிதிரள்வதை தடுப்பதைக் நோக்கமாகக்; கொண்டதே முஹம்மது நபிகளாரை நிந்தனை செய்யும் திரைப்படம் என்று இந்தியாவின் ஜம் இய்யதுல் அஹ்லுல் குர்ஆன் அமைப்பின் தமிழ்நாட்டு மாநிலத் துணைத் தலைவர் கோவை எஸ்.ஐயூப் பறஹகதெனியவில் தெரிவித்தார்.

ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பினர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பறஹகதெனியவில் ஏற்பாடு செய்திருந்த இருநாள் வதிவிட இஸ்லாமிய தேசிய மாநாட்டில் விசேட உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பறஹகதெனிய அஸ்ஸலபிய்ய கலாபீட மைதானத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அண்ணலாரின் அழகிய முன்மாதிரி என்ற தொனிப்பொருளில் கோவை எஸ்.ஐயூப் இவ்விசேட உரையை நிகழ்த்தினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,

இன்று உலகெங்கிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களையும், கண்டன ஊர்வலங்களையும், மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். உலக முஸ்லிம்களே கொதித்தெழுந்திருக்கின்றார்கள்.  இதில் உயிரிழப்புக்கள், காயங்கள், சேதங்கள், பொருளாதார நஷ்டங்கள் என எல்லாமே ஏற்பட்டிருக்கின்றன.  இவையெல்லாம் எதற்கென்றால் நாம் உயிரிலும் மேலாக மதித்துக் கௌரவிக்கின்ற அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கின்ற திரைப்படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததன் விளைவேயாகும்.  

இரண்டு மணித்தியாலங்கள் ஓடக்கூடிய நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலான திரைப்படத்தை ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் எடுத்திருக்கின்றார்கள்.  அறுபது நடிகர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்துக்கு 120க்கும் மேற்பட்ட யூதர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.  என்றாலும் இத்திரைப்படம் கனடா நாட்டில் காண்பிக்கப்பட்ட போதிலும் அது ஒருவார காலம்கூட வெற்றிகரமாக ஓடவில்லை.  இப்படம் தோல்வியுற்றது.  இவ்வாறான நிலையில்தான் இத்திரைப்படத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களைக் இழிவுபடுத்தும் சில காட்சிகளைத் தொகுத்து 15 நிமிடம் யூ-டியூப் இணைய வலையமைப்பில் இணைத்து விட்டார்கள்.   இதனைத் தொடர்ந்துதான் இத்திரைப்படத்துக்கு எதிராக முழு உலக முஸ்லிம் சமூகமும் கொதித்தெழுந்திருக்கின்றது. 

முஸ்லிம் சமூகம் இவ்வாறு கொதித்தெழ வேண்டும், ஆத்திரமடைய வேண்டும், வன்முறைகளில் ஈடுபட வேண்டும், தங்களது இறைத்ததூதர் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்குப் பதிலாக மாற்று மத இறைத்தூதரை அவர்கள்; இழிவுபடுத்த வேண்டும் போன்ற முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக்; கொண்டுதான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.  இவ்வாறான செயற்பாடுகளை மாற்றுச் சகோதரர்களிடம் ஊடகங்கள் மூலம் காண்பிப்பதன்மூலம் அவர்கள்; இஸ்லாத்தை நோக்கி; அணிதிரள்வதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் எதிர்பார்கின்றார்கள்.

இன்று மேற்குலகில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. நவீனயுகப் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான  ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்பது  அறிவியல் ரீதியாகவே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  அதன் வெளிப்பாடாகத்தான்  நாளுக்குநாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.  இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள், பொறுமை, சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதை மாற்று மத சகோதரர்கள் மத்தியில் காண்பிக்க முயற்சி செய்கின்றார்கள். 

இதனூடாக  இஸ்லாத்தின் பக்கம் மாற்று மதச் சகோதரர்கள் அணிதிரள்வதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றார்கள்.  அதேநேரம் எங்களது உயிரிலும் மேலான இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை அவர்கள் நிந்தித்ததற்குப் பதிலாக நாம் அவர்களது இறைத் தூதரை நிந்திக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  ஆனால் அவர்களது எதிர்பார்ப்புப்படி நாம் ஒருபோதும் அவர்களது இறைத்தூதரை நிந்திக்கவே மாட்டோம். அவ்வாறு நிந்திப்பதற்கு இஸ்லாம் இடமளிக்கவுமில்லை, எம்மைப் படைத்த இறைவன் அச்செயலை தடுத்துமிருக்கின்றான்.  என்றாலும் அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப முஸ்லிம் சமூகம் உணர்ச்சிவசப்படாது, வன்முறைகனில் ஈடுபடாது பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் அறிவியல் ரீதியாக செயற்பட வேண்டும்.  முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சிறப்பையும், மகத்துவத்தையும் உலகெங்கினும் கொண்டு செல்ல வேண்டும்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தனியே அரபு நாட்டுக்கு மட்டுமுரிய இறைத் தூதரோ அல்லது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்ற முஸ்லிம்களுக்கு மாத்திரமுரிய இறைத் தூதரோ அல்லர்.  உலகம் இருக்கும் வரைக்கும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் அதவர்தான் உலகளாவிய இறைத்தூதர்.  இதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான இவ்வாறான மோசமான விமர்சனங்கள் நேற்று இன்று ஆரம்பித்தவையல்ல.  அண்ணலாரின் வாழ்வுக் காலத்தின் போதே அவருக்கெதிரான விமர்சனங்கள் தொடங்கி விட்டன.  அவற்றை அன்னார் எவ்வாறு எதிர்கொண்டார் என்பது எல்லோருக்கும் ஒருநல்ல முன்மாதிரியாக இருந்து கொண்டிருக்கின்றது.  ஆகவே இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் துணைபோகாது தூர நோக்கோடும், புத்திசாதுரியத்தோடும் செயற்படுவதே காலத்தின் அவசியத் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.







No comments

Powered by Blogger.