கிழக்கு முதலமைச்சராக என்னை நியமிக்கவே ஜனாதிபதி முயன்றார் - பிள்ளையான்
தனக்கு முதலமைச்சர் பதவி கிடக்காதது ஒரு தற்காலிகப் பின்னடைவு என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனத்தை அடுத்து தோன்றியுள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில், அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரயாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
முஸ்லிம் காங்கிரசும், தமிழரசுக்கட்சியும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்குப் போடக்கூடாது என்றே பிரசாரம் செய்தன. கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியை மட்டும் பார்க்கவில்லை.பல்வேறு அழுத்தங்களுக்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
ஆளும் கட்சிக்கு பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை .எனினும் இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியில் எனக்கு சுமார் 30,316 பேர் வாக்களித்துள்ளார்கள் என்றால் அதுவும் பெரும் சவால் தான். மேலும் 15,000 வாக்குகளைப் பெற்றிருந்தால் நானும் முதலமைச்சராகி இருப்பேன். இது ஒரு தற்கால பின்னடைவே.
மூன்று இன மக்களும் கிழக்கு மாகாணத்தில் வாழ்கிறார்கள் இந்த மாகாண சபைக்கு ஏழு தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். முடிந்த வரை ஜனாதிபதியும் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக என்னை நியமிக்கவே விரும்பினார். எனினும் தமிழர்களின் பெரும்பான்மை வாக்கு ஆளும் கட்சிக்கு கிடைக்கவில்லை. எனவே ஏனைய கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டி ஏற்பட்டது.
எனினும் எனக்கு வாக்களித்த கிழக்கு மாகாண மக்கள் எவ்விதத்திலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான ஆலோசகராவே ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபை செயலாளரர் ஒரு சின்ஹலவர் ....அம்பாறை திருகோணமலை அரச அதிபர் சின்ஹலவர் .......கல்வி காணி அமைச்சர் சின்ஹலவர் ......முதல்வர் சுதந்திர கட்சி பொம்மை முஸ்லிம் ......தமிழ் பேசும் சமுகம் 75% வாழும் இந்த பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது ........எங்களை யாரும் காப்பற்ற முடியாது .....
ReplyDeleteசின்ஹலம் தன நோக்கதை சரியாக செய்கிறது .......
Aasai yaarai vittathu.
ReplyDeleteYaar tharuvaar intha ariyasanam kudi arasodu enakkum oru seriyaasanam.
முன்னாள் முதலமைச்சரின் இப்போதைய வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களால் நிறையச் சேவைகள் செய்யமுடியும். அடுத்தமுறை அதிகூடுதல் விருப்புவாக்குகளால் வெற்றிபெறவும் முடியும் அதற்காக சில விடயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
ReplyDelete01.உங்களைச் சூழ உள்ளவர்களை ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள்
02. அவசியமற்ற சாக்கடைகளை அப்புறப்படுத்தி உங்கள் பயணத்தை உறுதிப்படுத்துங்கள்.
03. மக்களால பிடிக்க முடியாதவராக இல்லாது மக்களோடு மக்களாக இருங்கள்
04. பம்மாத்து அரசியலுக்கு ஐடியா தருபவனை நம்பவும் வேண்டாம் அதைச் செய்யவும் வேண்டாம்.
05. யாரை நம்ப வேண்டும் என்பதில் தெளிவடையுங்கள்
06. தமிழ்தேசியகூட்டமைப்பு இல்லாத தளத்தில் இலகுவாகக்கிடைத்த வெற்றி இப்போது உங்களுக்கு மிகச் சிரமமிக்கதாகியுள்ளது எனவே அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு இதயசுத்தியான இணக்கமான சூலழை ஏற்படுத்துங்கள்.
அன்புடன்
முஸ்டீன்
நாங்க நம்பிட்டோம்...கேட்கிறவன் கேனயனாக இருந்தால்..கேப்பைளையும் நெய் வடியுமாம்..அனால் இங்க என்னவெல்லாம் வடியுது
ReplyDelete