Header Ads



மஹிந்த ராஜபக்ஸ புத்தருக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டார் - பாரதிய ஜனதா கட்சி


புத்தர் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அடிக்கல் நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவில் பௌத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்ச பேசிய பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்று அமைந்துள்ளன என  தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தம் சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம் நிறைந்த நெஞ்சும், விரோதமனப்பாவமும், மதங்கள் மீதான வெறுப்பும் கொண்டு தன் இராணுவத்தை வைத்தே தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பெரும் அழிவை ஏற்படுத்தி நம் தமிழ் சமுதாயத்தை கருவறுத்த இலங்கை அதிபர் ராஜபக்ச கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத்தன்மை முக்கியமானது என்று பேசி உள்ளார்.

அகிம்சா மூர்த்தியான காந்திஜியின் பெயரைக் கூட உச்சரிக்க அருகதையற்ற ராஜபக்சே அகிம்சை, அமைதி பரப்பவேண்டிய கடமை பற்றி பறைசாற்றியுள்ளார். இலங்கை தமிழரின் அறிவுசார் முன்னேற்றத்தை தாங்க முடியாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்ட ராஜபக்ச இந்திய நாட்டுக்கு போதனை வழங்கி இருப்பது நம் நாட்டிற்கே கலங்கத்தை விளைவிக்கும்.

இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டு, 20-20 கிரிக்கெட் போன்ற அலங்கார விழாவுக்காக மட்டும் அழைக்கும் அசிங்கத்தை, இனிவரும் காலத்தில் எக்காரணம் கொண்டும் அரங்கேற்றக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



1 comment:

  1. அசிங்கம் பிடித்த பிஜேபியை முதலில் இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்.முஸ்லிம்களை கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் பரதேசிகள் புலன் பியர் காசை நம்பி அறிக்கைவிடும் இப்படியான கோமாளிகளை உணர்வுள்ள
    தமிழர்கள் புரிந்து விரட்டியடிக்க வேண்டும்.ராஜபக்ச குடும்பம் சுத்தமில்லை அவர்களை அடி வேர்களுடன் வெட்டியெறிய மக்கள் தயாராக இருந்தாலும் புலிப் பயங்கரவாதத்தை அழித்தற்காக பாராட்டலாம்.

    ReplyDelete

Powered by Blogger.