யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் வரைந்து வைத்துள்ள அதிகார வேலியினை உடைத்தெறிவோம்
காட்டிய வழிகளெல்லாம் பயணித்தோம். மரணங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மேய்ப்பனற்ற மந்தைகளுக்கும் நேராத கதி எமக்குத் தேடித்தரப்பட்டது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வவணதீவு பிரதேசத்துக்குட்பட்ட நாவற்காட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஓர் ஆசிரியரது வீட்டுக்கு முன்னால் பிரஞ்சுப் படைகளின் இராணுவ வண்டி வந்து நிற்கின்றது. புரட்சிகர சிந்தனையாளரான அவர் குடும்பத்துடன் கைதுசெய்யப்பட்டார். அவரது பையனை மட்டும் விட்டுவிட்டார்கள். அந்தச் சிறுவனது மெலிந்த உடல்,பலவீனமான தோற்றம் இவற்றைக் கண்டு இராணுவத்தினர் எள்ளி நகையாடினர். வண்டியில் கூட இடமில்லை; இந்தப் பல்லியை ஏற்றிச் சென்று என்னசெய்வது? என்று கூறிவிட்டு அவனது குடும்பத்தினை மட்டும் கொண்டு செல்கின்றனர். தனது குடும்பத்தினை அந்தச் சிறுவன் பிறகு கண்களில் காணவே இல்லை. கைது செய்வதற்குக் கூடத் தகுதியற்ற, மிகப் பலவீனமான இந்தச் சிறுவன்தான் பின்னாளில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தினை வியட்நாமிலிருந்து அடியோடு ஒழித்த ஹோசிமின் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா'?
எமது சமூகம் இன்னும் தன்னம்பிக்கை அற்ற சமூகமாக நிமிர்ந்து நிற்கத் தகுதியற்ற இயலாமை கொண்ட சமூகமாக தொடர்ந்தும் இருக்க நாம் அனுமதிக்க முடியாது. பலவீனமான ஒரு சிறுவனால் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தினை அடியோடு ஒழிக்க முடிந்திருக்கின்றதென்றால் எமது மக்களால் மட்டும் ஏன் நம்மை நாமே ஆள முடியாமல் இருக்கிறது.
வரலாறுகளில் இருந்து நாம் நிச்சயம் பாடங்களைக் கற்றுக் கொண்டேயாக வேண்டும். அது தவிர்க்க முடியாதது. எழுதப்படாத விதி. வெற்றி வழியின் வரைபடம். நாம் இது நாள் வரைக்கும் மற்றவர்களுக்காகத்தான் உழைத்தோம். புரட்டுக்களைப் பேசி அழிவுகளை வாங்கித் தரும் ஜனநாயக வேடதாரிகளுக்கே வாக்களித்தோம்.
அரசியலில் சரியான தெளிவு என்பது எமது மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கின்றது. நம்மை நாமே நம்பவில்லை, நமது பாதையினை நாமே அமைத்துக் கொள்ளவில்லை. காட்டிய வழிகளெல்லாம் பயணித்தோம். மரணங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை, மேய்ப்பனற்ற மந்தைகளுக்கும் நேராத கதி எமக்குத் தேடித்தரப்பட்டது.
எம்மை விற்பனைப் பொருளாக்கி அரசியல் சந்தையில் வியாபாரம் செய்து பிழைத்து வந்திருக்கிறது ஒரு கூட்டம். இன்று அதே கூட்டம் எமது மண்ணில் எம்மை வீழ்த்த எமது மக்களிடமே ஆணை கேட்டு வந்திருக்கிறது. எமதுமக்கள் ஒன்றுபட வேண்டிய வரலாற்றுச் சந்தர்ப்பம் இது. யாழ் .மேலாதிக்கவாதிகளால் உந்தப்பட்டு அழிந்த நாம் இனி ஒருபோதும் இழப்புக்களைத் தேடிப் போகத் தயாரில்லை என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும்.
தங்களைப் பிரபுக்களாக, மேட்டுக்குடிகளாக கருதிக் கொண்டு எம்மைக் கருவிகளாகப் பிரயோகித்து அரசியல் செய்யும் கூட்டமைப்பை வெளியே தூக்கியெறியத் தயாராக வேண்டும். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத நிலைமை ,பற்றிச் சம்பந்தருக்கு தெரியுமா? தனது மகன் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழும் எத்தனை அம்மாமார் இங்கே இருக்கிறார்கள். சம்பந்தருக்குத் தெரியுமா?
கைகள், கால்கள், கண்கள் இழந்து தினம் தினம் செத்துப் பிழைப்போர் எத்தனை பேர் என்று சம்பந்தருக்குத் தெரியுமா? தாய், தந்தை முகத்தினை இனிமேல் எப்போதுமே பார்க்க முடியாத குழந்தைகள் எத்தனை பேர் என்று சம்பந்தருக்குத் தெரியுமா? பொருளாதாரக் கஷ்டம் வாழவழியில்லை, என்று எத்தனை தற்கொலைகள்? சமூகம் சீரழிந்துகிடக்கிறது. இது எவையுமே சம்பந்தர் கண்களுக்கு ஏன் தென்படுவதில்லை?
சமூக சிந்தனையற்ற அரசியல்வாதிகளாகவே இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள். சம்பந்தர் பிள்ளைகளுக்கு சுகவாழ்வு, எங்கள் பிள்ளைகளுக்கு சுடுகாடு. இந்த முறைமை இனி எமக்குத் தேவையில்லை. இதனை அனுமதிக்கவும் கூடாது. அந்த வகையில் அதிகார வெறிகொண்ட யாழ் .மேட்டுக்குடிகள் எம்மைச் சுற்றி வரைந்து வைத்துள்ள அதிகார வேலியினை உடைத்தெறிவோம். சொந்த இனத்தையே வேறுபாடு காட்டி அடிமையாக நடத்துவது என்பது எவ்வளவு கேவலமான செயல். இந்த மேலாதிக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.
எமக்குயாரும் எதையும் தரமாட்டார்கள், எமக்குத் தேவையானதை நாம் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். வாருங்கள் பயணிப்போம் என்று கூறினார்.

.
Post a Comment