Header Ads



அஷ்ரப்பின் மறைவுக்கு பின் முஸ்லிம்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் என்ன? அமீர் அலி

அனா 
 
முஸ்லீம்களும் சிங்களவர்களும் மோதிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் தனக்கு அரசியல் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்று முஸ்லீம் காங்கிரஸ் தலைமை நினைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார்.
 
ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் எம்.அச்சிமுகம்மது தலைமையில்  (02.09.2012) இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
முதியோர் முதல் சிறுவர்கள் வரை நேன்பு நோற்று பிரார்த்தனை செய்து சமூகத்தின் பாதுகாப்பிற்காக மறைந்த தலைவரினால் வளர்ததடுக்கப்பட்ட கட்சி அவரின் மறைவின் பின்னர் இன்று முஸ்லீம் சமூகத்தை இன்னொரு சமூகத்துடன் பகைமைப்படுத்தி கட்சிக்கு வாக்குச் சேர்க்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 
சமூகத்தின் கல்வி, விவசாயம், நிலப் பிரச்சினை, குடி நீர் பிரச்சினை, என்று எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் எதுவும் தெரியாமல் எமது கட்சியால்தான் எமது உரிமையைப் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றனர் மர்ஹூம் அஸ்ரப் தலைவரின் மறைவுக்குப் பிறகு இன்றயத் தலைவரால் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் எவை என்று பார்த்தால் அதற்கு விடை கேள்விக் குறியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார்.
 
இக் கூட்டத்தின் போது 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.பி.உவைஸின் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 65 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக  முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் இணைந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தில் முன்னால் சுகாதாரப் பிரதி அமைச்சர் சுரெஸ் வடிவேல், வத்தளை – மாபோல நகர சபையின் நகர பிதா ஏ.எச்.எம்.நௌஸாத், ஓட்டாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர் எம்.கே.முஹைதீன் ஆகியோரும் உரையாற்றினர்.   
 





 
 
 

1 comment:

  1. அஷ்ரப் இருக்கும் வரை கட்டுப் பெட்டிப் பாம்புகளாக அடங்கி இருந்தீர்கள். முஸ்லிம் சமூகத்துக்கு எல்லாம் கிடைத்தது. அஷ்ரப் மரணித்ததன் பின்னர் எட்டப்பன் வேலை செய்ய நீங்களும் உங்களைப் போன்றோரும் கிளம்பினீர்கள், சமூகம் கிடைக்க வேண்டிய அனைத்தையும் இழந்தது. நீங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து சமூகத்துக்குச் செய்ய வேண்டியதை செய்யாமல் உங்கள் உங்கள் கூட்டுக்கு வீசச் சென்றுவிட்டு பழியை மட்டும் ஒருவர் தலையில் போடுகின்றீர்களே வெட்கமாக இல்லை. சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை உங்களுக்குத் தேவை பதவி. அதைத்தானே ”முதலமைச்சருக்கான பயணம் இது” என்று மிகத் தெட்டத் தெளிவாகவே விளம்பரப்படுத்தி இருக்கின்றீர்களே. முதலமைச்சருக்கான பயணம் என்பது முஸ்லிம் சமூகத்துக்குரியது. அமீர் அலிக்குரியதல்ல.

    ReplyDelete

Powered by Blogger.