Header Ads



இஸ்ரேலுடன் யுத்தம் நிச்சயம் - ஈரான் இராணுவத் தளபதி



TN

இஸ்ரேல் எச்சரிக்கைக்கு அப்பால் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என ஈரான் புரட்சிப் படை தளபதி மொஹமட் அல் ஜபாரி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நிகழ்ந்தால் யூத நாடு தரை மட்டமாகும் என அவர் எச்சரித்தார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தும் என சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் இராணுவம் இவ்வாறு கூறியுள்ளது. 

“அவர்களது எச்சரிக்கை இஸ்லாம் மற்றும் ஈரான் மீது எவ்வளவு பகையு ணர்வுடன் இருக்கி றார்கள் என்பதை காண்பிக்கிறது. இந்த பகை ஒரு மோதலாக மாறும்” என்று அல் ஜபாரி நடந்த ஊடக மாநாட்டில் கூறியதாக ஈரானின் இஸ்னா செய்திச் சேவை கூறியுள்ளது. “யுத்தம் ஒன்று ஏற்படுவது தெளிவானது. ஆனால் அது எப்போது எங்கே நிகழப் போகிறது. தெரியாது அதற்காக நாம் எமது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

No comments

Powered by Blogger.