'முஸ்லிம்களுக்கு எதிரான படத்தை தயாரித்த எனக்கு, சிறையில் அச்சுறுத்தல்'
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்து, பல்வேறு நாடுகளில் வன்முறைக்குக் காரணமான தயாரிப்பாளர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர்.
எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார்.இந்த படத்தை தயாரித்தவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த நகோலா பாஸ்லி. தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார்.வங்கி மோசடி தொடர்பாக, 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நகோலா, கடந்த ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் இருந்த காலத்தில், அவர் நன்னடத்தை விதியை மீறியதாகக் கூறி, நேற்று இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்."முஸ்லிம்களுக்கு எதிரான படத்தை தயாரித்த எனக்கு, சிறையில் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, விடுதலை செய்ய வேண்டும்' என, லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் இவர் கோரினார். ஆனால், நீதிபதிகள் இவரை விடுவிக்க மறுத்து விட்டனர்.
இப்படி சொல்லி வெளி வரத் துடிக்கிறான்.இந்தப் பயம் வெளியில் வந்தாலும் இருக்கும்.வெளியில் போகும் ஓணானை பிடித்து சட்டையினுள் விட்டு விட்டு குத்துது குடையுது என்றான் நாங்கள் என்ன செய்வது.சாகும் வரை உனக்கு இழி நிலைதான்
ReplyDeleteivanukku veliyil aafaththu endru than america ivanai ulle paadukappaha vaiththullathu endru ninaikkiren.
ReplyDelete