Header Ads



பள்ளிவால் உடைப்புக்கும் அரசுக்கும் தொடர்பில்லை - அமைச்சர் றிசாத்

 
கே.ஆர். பஷீர் காண்
 
முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த தலைவரினால் என்ன கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தக் கொள்கைகள் அத்தனையும் அவரது மரணத்தோடு சேர்த்து இன்றைய தலைமை புதைத்து விட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில்  எம்.ஏ.சலாம் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில,
 
இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வெற்றிலைக்கு வாக்களித்தால் பள்ளிவாயல்கள் உடைக்கப்படும் என்று கூறுகின்றாரே பள்ளிவாயலை உடைக்க வந்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரா என்று என்று பார்த்தால் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காகத்தான் செய்யப்பட்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாயலை உடைக்க தலைமை தாங்கி வந்தவர் தம்புள்ள பிரதேச சபைத் தேர்தலில் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர். இதே போன்றுதான் தெஹிவளையில் பள்ளிவாயலை உடைக்க தலைமை தாங்கி வந்தவர் அமெரிக்காவின் முகவர். குருணாகலில் தலைமை தாங்கி வந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்.
 
பள்ளிவால் உடைப்புக்கும் அரசுக்கும் தொடர்பில்லையென்று தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
 
பள்ளிவாயல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் வீராப்போடு பேசும் ஹக்கீம் இந் நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்தச் சந்தர்ப்பத்திலாவது பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு எந்த முகத்துடன் இங்கு வந்து வீராப்புப் பேசுகின்றார். இவ்வாறு சமுகத்தைப் பற்றி பேச வேண்டிய இடத்தில் பேசாமல் சமூகத்தை காட்டிக் கொடுப்பதற்காகவா மறைந்த தலைவரால் முஸ்லிம் காங்கிரஸ் உறுவாக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
 

 

4 comments:

  1. அப்போ பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் சாட்சி சொல்கின்றார்.
    அப்படியானால் அஸவர் எம்பி இராஜினாமா செய்யலாமே!
    சரி பள்ளிவாயல்களை உடைத்ததற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று வைத்துக் கொள்வோமே. பள்ளிவாயல்களை உடைப்பதற்கு இன்ன இன்னார்தான் வந்தார்கள் என்று அமைச்சர் ரிஷாத் எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றார்.
    அமைச்சர் அவர்களே, உங்களை நீதியின் முன் நிறுத்திய சட்டம் அந்த ”தீவிரவாதிகளை” ஏன் இன்னும் கைது செய்து நீதியின் முன் நிறுத்தவில்லை? சட்டத்தின் காவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?
    இவர்கள் என்ன பிரபாகரனையும் விட பயங்கரமானவர்களா?
    அரசுக்குச் சம்பந்தம் இருப்பதாக நாம் சொல்வதில் தப்பில்லை அல்லவா?
    சும்மா கதையளப்பதை விட்டுவிட்டு காரியத்தைப் பாருங்கள்.

    ReplyDelete
  2. அவர் பேசவில்லை சமூகத்தை காட்டிகொடுக்கின்றார்
    சரி....... நீங்கள் ஏன் பேசவில்லை?

    ReplyDelete
  3. அமைச்சர் உண்மையினை தான் சொல்கின்றார்.அவர் அரசியல் பதவிகளுக்காக பொய் கூறுவதில்லை. தான் மட்டும் அரசியல்வாதியாக இருந்திருக்க வேண்டும் என்றிருந்தால்,ஹூனைஸ் பாருக்கினை உருவாக்கியிருக்கமாட்டார்.தம்புள்ள பள்ளி விடயம் குறித்து அவரவர்களின் பார்வையில் தான் கருதடதுக்கள் வரும்

    ReplyDelete
  4. paavam amaichar apadi pessa vandum anru theriyamal pessi kondirukinrar

    ReplyDelete

Powered by Blogger.