Header Ads



அமெரிக்கா மாற வேண்டும் -முஹம்மது முர்ஸி


TU

அரபு நாடுகளுடனான அணுகுமுறையை அமெரிக்கா மாற்றவேண்டும் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கைகளுக்கும், அரபு விரோத அணுகுமுறைகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்தார் முர்ஸி.

ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு புறப்படும் முன்னர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் நேர்முகப் பேட்டியை அளித்தார்.

‘தொடர்ச்சியாக அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் அரசுகள் அரபு சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்துள்ளன. இதற்கான காரணம் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் அமெரிக்கா அளித்து வரும் நிபந்தனைகள் ஏதும் இல்லாத ஆதரவாகும்.’ என்று முர்ஸி கூறினார்.

ஃபலஸ்தீன் மக்கள் அனுபவிக்கும் துயரம் குறித்து பேட்டியில் தனது கவலையை தெரிவித்த முர்ஸி, ஃபலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டை உருவாக்கி அளிப்பதில் அமெரிக்காவுக்கும் பொறுப்பு உள்ளது என்றார். 1978-ஆம் ஆண்டு செய்துகொண்ட கேம்ப் டேவிஸ் ஒப்பந்தத்தில் மேற்கு கரை மற்றும் காஸ்ஸாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளது என்று முர்ஸி சுட்டிக்காட்டினார்.

இஃவானுல் முஸ்லிமீனுடனான தனது உறவை உறுதிச்செய்த முர்ஸி, தான் ஒரு இஃவான் தலைவர் என்பதை உறுதிபட தெரிவித்தார்.

சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண எகிப்து உறுதிப்பூண்டுள்ளது. இரத்தக் களறியை நிறுத்த சிரியா அரசு தயாராகவேண்டும் என்று தெரிவித்தார்.

சிரியா பிரச்சனையை தீர்க்க நான்கு இஸ்லாமிய கூட்டணி நாடுகளில் ஈரானை சேர்த்துக் கொண்டதை முர்ஸி நியாயப்படுத்தினார். சிரியா விவகாரத்தில் ஈரானின் தலையீடு அவசியம் என்பதை அவர் தெரிவித்தார்

1 comment:

  1. அமெரிக்கா மாறத் தேவையில்லை.அரபு,முஸ்லிம் நாடுகள் தான் மாறவேண்டும்.அந்தக் காலம் எப்போது வருகிறதோ
    அன்றுதான் உலகிற்கு விடிவு.

    ReplyDelete

Powered by Blogger.