Header Ads



ஈரானின் மரண தண்டனையைவிட இந்தியாவின் தீர்மானம் கொடியது - சல்மான் ருஷ்டி


ஈரான் என்னைக் கொல்ல பிறப்பித்த உத்தரவை விட, இந்தியாவின் நடவடிக்கைகள் தான் என்னை வேதனைப்படுத்தியுள்ளது என, சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்து, லண்டனில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, "சாத்தானின் வேதங்கள்' என்ற பெயரில், சர்ச்சைக்குரிய வகையில் புத்தகம் எழுதியதால், ஈரான் நாடு, அவருக்கு மரண தண்டனை அறிவித்தது. இதனால், அவர் பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தார். 

தற்போது அவர், "ஜோசப் ஆன்டன்' என்ற பெயரில் தனது அனுபவங்கள் குறித்து, புத்தகம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நான் எழுதிய, "சாத்தானின் வேதங்கள்' என்ற புத்தகத்துக்கு தடை விதித்த முதல் நாடு, இந்தியா. எனக்கு, "விசா' வழங்கவும் அந்நாடு மறுத்து வருகிறது. இதனால், 12 ஆண்டுகளாக நான் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. ஈரான் என்னைக் கொல்ல பிறப்பித்த உத்தரவை விட, இந்தியாவின் நடவடிக்கைகள் தான் என்னை மிகவும் புண்படுத்தி விட்டன. அதேபோல, லண்டனில் உள்ள இந்திய கலாசார மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கும் என்னை வரவேற்கவில்லை. அப்போது, இந்த மையத்தின் இயக்குனராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி இருந்தார். என்னை அழைத்தால், அது, முஸ்லிம் விரோதமாகி விடும் என்றும், அது இந்திய அரசின் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்தி விடும் என்றும் கூறப்பட்டது. நியூயார்க் நகரில், 1997ம் ஆண்டு, இந்தியாவின், 50வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போதும், அதில் கலந்து கொள்ள வேண்டாம் என, அதிகாரிகள் என்னிடம் கூறினர். 1999ம் ஆண்டு, இந்தியா செல்ல எனக்கு, "விசா' கிடைத்தும், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் நான் செல்ல முடியவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


1 comment:

  1. மரண தண்டனையை விட கொடியது,இப்படியே அணு,அணுவாக கவலைப்பட்டு சாவது.இறைவன் சரியான தண்டனையை தந்திருக்கிறான்.இதையும் எழுதி காசாக்க நினைத்த நீயெல்லாம் மனித மிருகம் தான்

    ReplyDelete

Powered by Blogger.