Header Ads



நீர்கொழும்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு


எம்.ஜே.எம். தாஜுதீன்

இஸ்லாத்தையும் - இறுதித் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்புப் பிரதேச முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

நீர்கொழும்புப் பிரதேச பள்ளிவாசல்களின் சம்மேளனம் அண்மையில் கூடியபோது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களில் இருந்தும் ஜும்ஆத்தொழுகைக்குப் பின்னர் மக்கள் ஊர்வலமாகச் சென்று நீர்கொழும்பு நகரின் மத்திய பகுதியில் ஒன்றுகூடி சுலோகங்களைக் கோஷித்து ஆர்ப்பாட்டம் செய்வர். அதன்பின்னர் சிங்கள மொழியில் உரையொன்றும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குப் பிறகு முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி இந்த ஆர்பாட்ட நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2 comments:

Powered by Blogger.