Header Ads



ஐரோப்பிய நாடுகளில் முதியோர் பராமரிப்பு - இலங்கையில் விசேட படநெறி அறிமுகமாகிறது


TN

ஐரோப்பிய நாடுகளில் முதியோர் பராமரிப்பு வேலைகளுக்கு இலங்கை இளைஞர் யுவதிகளை அதிகளவில் அனுப்புவதற்கு ஏதுவாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முதியோர் பராமரிப்பு தொடர்பான விசேட பாடநெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகமும் இதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. சர்வதேசத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய சான்றிதழை இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இந்தப்பாடத் திட்டம் அமையவுள்ளது.

வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் முதியோரைப் பாதுகாப்பதற்கான வேலை வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனினும் அவர்களை பராமரிப்பது குறித்து சரியான அறிவு இல்லாமையால் இலங்கையிலிருந்து இத்துறைக்கு சரியான ஆட்களை அனுப்ப முடியாதுள்ளது. முதியோர் பராமரிப்பு வேலைகளுக்காக ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி விஜித நாணயக்காரவும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நாடளாவிய ரீதியில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 30 பிரதேச மத்திய நிலையங்களிலும் இப்பாடநெறி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கள் மூன்று மாத பயிற்சி வகுப்புக்களாக அமையும்.

2 comments:

  1. ஐரோப்பிய நாடுகளே உள்ளவர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது.சனங்களை ஏமாற்றி காசு பறிப்பதற்கு பண்ணும் நாடகம்

    ReplyDelete
  2. யூரோ வலயத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

    நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யூரோ வலய நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 18.2 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜுலையில் 11.4 வீதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை ஆகஸ்ட்டில் இவ்வாறு அதிகரித்துள்ளது. இதில் அதிக பட்சமாக ஸ்பெயினில் 25.1 வீதமானோர் வேலையின்றி இருப்பதோடு மிகக் குறைவாக ஆஸ்திரியாவில் 4.5 வீதத்தினர் வேலையின்றி உள்ளனர். ஜெர்மனியில் 5.5 வீதத்தினர் வேலையின்றி உள்ளனர். எனினும் யூரோ வலயத்தில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணி க்கை உயர்வாகவே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு நிறுவனத்தின் தகவலின் படி கடந்த ஆகஸ்ட்டில் யூரோ வலயத்தில் 25 வயதுக்கு கீழான 22.8 வீதத்தினர் வேலை இன்றி உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 52.9 வீதமான இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.