கல்முனை துறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் போனார்
எம். எம். ஜெஸ்மின்
நேற்று இரவு கல்முனை துறையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவர் கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதால் அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய எம்.ஐ.லத்தீப் என்பவரே இவ்வாறு காணாமல் போனவராகும்.
நேற்றிரவு காணாமல் போனவர் மூன்று மீனவர்களுடன் ஆழ்கடலில் இயந்திர படகு மூலம் சென்று கொண்டிருக்கும் போது கடலில் ஏற்பட்ட காற்று மற்றும் பலத்த அலை காரணமாக இவர் படகிலிருந்து கடலில் வீசப்பட்டிருக்கலாம் என இவருடன் பயணித்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இவரை தேடும் பணியில் இன்று ஆழ்கடல் மீனவர்கள் ஈடுபட்டதுடன் கல்முனை துறையைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுஷ்டித்தனர். நாளை கல்முனை துறையில் தரித்து நிற்கும் சகல இயந்திரப்படகுகளும் இவரை தேடும் பணியில் ஈடுபடவுள்ளன.
இலங்கையின் எந்தப்பகுதியிலாவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் முஹம்மட் நஸீரின் தொலைபேசி ( 0772355430) இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டகப்பட்டுள்ளனர்.
Post a Comment