'மாகாண அதிகாரங்களை பறிக்கும் திவிநெகும' - முஸ்லிம் காங்கிரஸின் திரிசங்கு நிலை..!
மாகாண சபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறிக்கும் சர்ச்சைக்குரிய திவி நெகும சட்டமூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக இந்தச் சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஊவா மாகாணசபையில் திவி நெகும சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வடமேல் மாகாணசபையிலும், மேல் மாகாணசபையிலும் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணசபையில் வரும் ஒக்ரோபர் 2ம் நாளும், வடமத்திய மாகாணசபையில் ஒக்ரோபர் 3ம் நாளும் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
முன்னதாக, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், மாகாணசபைகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்தநிலையிலேயே கிழக்கில் ஆட்சி அமைத்த கையுடன் திவி நெகும சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. எனினும் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் வாக்களிப்பர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர வலியுறுத்தி வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மு.கா. இச்சட்டத்திற்கு ஆதரவளிக்குமா என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது.
தங்களுக்கு முழு, அரை மந்திரி பதவிகளும், சுகபோகங்களும் கிடைக்குமாயின் திவிநெகும திட்டத்திற்கு மாத்திரமில்லை. மாகாண சபையையே இல்லாமல் செய்யவும் ஒப்புதல் வழங்குவார்கள்.
ReplyDeleteமாகாண சபையே தேவை இல்லை என்று கூறும் ஒருவரையல்லவா முதலமைச்சராக கொண்டு வந்தார்கள் இந்த முஸ்லீம் தலைவர்கள்.