கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம்
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது என பாடசாலை அதிபர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.
பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்வுள்ள இக்கூட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அதிபர் ஆதம்பாவா அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment